பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு... சூர்யா வீட்டிற்கு படையெடுக்கும் டாப் இயக்குனர் - அடுத்த படம்?
கருப்பு வெற்றி:
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்துள்ள நடிகர் சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சமீபத்தில் நடித்து வெளிவந்த கருப்பு திரைப்படம் மாபெரும் வெற்றியை படைத்து வசூல் சாதனையில் பெரும் லாபத்தை ஈட்டி கொடுத்திருக்கிறது .

கிட்டத்தட்ட ரூ.200 கோடிக்கு மேல் லாபம் ஈட்டி ஒரே வாரத்திலேயே இந்த திரைப்படம் அபார வசூல் சாதனை பெற்றிருக்கிறது. அதை தொடர்ந்து சூர்யாவின் மார்க்கெட் தற்போது கிடு கிடுவென உயர்ந்து உச்சத்தை தொட்டுவிட்டது .
உச்சம் தொட்ட மார்க்கெட்:
ஆம் கருப்பு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து டாப் இயக்குனர்கள் சூர்யாவின் வீட்டிற்கு கதை சொல்ல படையெடுக்கிறார்களாம். கருப்பு படத்தை தொடர்ந்து சூர்யா நடித்திருக்கும் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படம் வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார்.

அடுத்த திரைப்படம்:
இந்த படத்தை தொடர்ந்து சூர்யா 47 ஜித்து மாதவன், சூர்யா 48 டிஜே. ஞானவேல், சூர்யா 49 பா. ரஞ்சித் உள்ளிட்ட டாப் இயக்குனர்கள் சூர்யாவை வைத்து படம் எடுக்க கால்ஷீட் புக் செய்து விட்டார்களாம். இதனால் சூர்யா படும் பிஸியாக அடுத்தடுத்து நடித்து வருவார் என கூறப்படுகிறது.
