Toxic, Ramayana படங்களுக்கு பிறகு யாஷுடன் கைகோர்க்கும் இயக்குநர்?

 
Yash 22 Movie

ஒரு படம் பெரிய ஹிட்டானால் அடுத்தடுத்து அந்த ஹீரோ ரெண்டு மூன்று படங்களில் ஒப்பந்தமாகி ஒவ்வொன்றாக வெளியாகும். 

ஆனால், நடிகர் கடைசியாக நடித்த 'கேஜிஎஃப் 2' வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகி விட்டது. அதுவும் இது மிகப் பெரிய வெற்றியடைந்த படம்.

இதன் பிறகு இவர் நடிப்பில் 'டாக்ஸிக்' மற்றும் 'ராமாயணா' என இரண்டு படங்கள் உருவாகி வந்தது. இதில் 'டாக்ஸிக்' வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது. 'ராமாயணா' 2 பார்ட்களாக உருவாகுகிறது. இதன் பார்ட் 1 இந்த ஆண்டு (2026) தீபாவளிக்கும், பார்ட் 2 அடுத்த ஆண்டு (2027) தீபாவளிக்கும் வெளியாகுமாம்.

தற்போது, யாஷின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவரது 22-வது படத்தை பிரபல கோலிவுட் இயக்குநர் ஒருவர் தான் இயக்கப்போகிறாராம். 

From Around the web