Connect with us
cook

latest news

வச்சாங்கே மொத்தமா ஆப்பு! வெங்கடேஷ் பட்டை தொடர்ந்து அடுத்த விக்கெட்டும் காலி.. இதுதான் காரணமா?

Cook with komali: விஜய் டிவி ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான கேம் ஷோக்களை நடத்தி பெருமளவு ரசிகர்களை தன்னுள் வைத்திருக்கிறது. எப்படியாது டி. ஆர்.பியில் நம்ம சேனல்தான் டாப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக புதுபுது நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகின்றது.

அதற்கேற்ற வகையில் ஏராளமான புதுமையான தொகுப்பாளர்களையும் சமீபகாலமாக களமிறக்கியிருக்கிறது விஜய் தொலைக்காட்சி. அந்த வகையில் ரசிகர்களின் பெரும் வரவேற்புக்கு உள்ளான நிகழ்ச்சிதான் குக்வித் கோமாளி நிகழ்ச்சி. 4 சீசன்களாக நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

இதையும் படிங்க: ஒரு வழிக்கு வந்துட்டாங்கே! சூரியும் இல்ல.. சூர்யாவும் இல்ல.. வாடிவாசலில் நின்னு ஆடப்போறது இவர்தான்

ஆனால் இன்று திடீரென வெங்கடேஷ் பட் தன் இணையதள பக்கத்தில் குக் வித் கோமாளியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்து ஷாக் கொடுத்திருந்தார். அவரை தொடர்ந்து தாமுவும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் இனிமேல் குக்வித் கோமாளியில் எங்களை நீங்கள் பார்க்க முடியாது என்றும் அதற்கு பதிலாக நானும் வெங்கடேஷ் பட்டும் இன்னொரு வித்தியாசமான நிகழ்ச்சியின் மூலம் உங்களை சந்திக்க இருக்கிறோம் என்றும் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: எம்.ஆர்.ராதா நடிப்பு சரியில்ல!.. போட்டு உடைத்த இயக்குனர்!.. நடிகவேள் செஞ்சதுதான் ஹைலைட்!..

அதனால் வரப் போகும் அந்த புதிய நிகழ்ச்சிக்காக காத்திருங்கள் என்றும் தாமு கூறினார். எப்படி இருந்தாலும் குக் வித் கோமாளி 5 சீசன் ஒரு வேளை நடக்குமானால் ஏற்கனவே அதில் கோமாளிகளாக இருந்த பல பேர் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார்கள். அதனால் புது கோமாளிகளை கொண்டு வந்தாலும் முன்பு மாதிரி நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்குமா என்பதில் சந்தேகம்தான்.

Continue Reading

More in latest news

To Top