Categories: Cinema News latest news

‘கோட்’ படத்தை பார்த்து விக்னேஷ் சிவன் போட்ட பதிவு! ஈகோ இல்லாத ஆளுப்பா

Vignesh shivan: கோட் படத்தை பெங்களூரில் உள்ள ஒரு தியேட்டரில் விக்னேஷ் சிவனும் நயனும் இன்று போய் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கோட் படம் குறித்து விக்னேஷ் சிவன் போட்ட பதிவும் மிகவும் வைரலாகி வருகின்றது. விஜய் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம்தான் கோட். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் படம் தாறுமாறு தக்காளி சோறு என்ற வகையில் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.

அரசியலில் முழு மூச்சாக விஜய் இறங்கிய பிறகு வெளியான திரைப்படம் என்பதால் படம் ரிலீஸிலிருந்தே ஒரு வித பதற்றம் இருந்தது. படம் ரிலீஸில் எதாவது பிரச்சினை வருமா? அல்லது சென்சார் போர்டால் எதாவது வில்லங்கம் வருமா என்ற வகையில் அனைவருமே கதிகலங்கி போயிருந்தார்கள்.

இதையும் படிங்க: சினிமா வரலாற்றில் அஜித் படம்தான் அதில் நம்பர் ஒன்.. இவரே சொல்லிட்டாரே

ஒரு வழியாக எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. உலகளவில் கோட் திரைப்படம் முதல் நாளில் 126 கோடி கலெக்‌ஷனை அள்ளியதாக படத்தின் தயாரிப்பாளரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

விஜய் படம் என்றாலே கலெக்‌ஷன் இல்லாமல் இருக்குமா? அதை கோட் படமும் நிரூபித்துவிட்டது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் வெங்கட் பிரபுவிடம் இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவே இல்லை என பலரும் கூறி வருகிறார்கள். படமுழுக்க சர்ப்ரைஸ்களை வைத்த வண்ணம் ரசிகர்களுக்காகவே இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

இதையும் படிங்க: சினிமாவில் இருக்கும் ஒரே யோக்கியன்! விசித்ரா சொன்ன அந்த நடிகர் யார் தெரியுமா?

3 மணி நேரம் என்றாலும் படம் போவதே தெரியாத அளவுக்கு விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் வெங்கட் பிரபு. விஜயை வைத்து நல்ல ஒரு ஹிட்டை கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். இந்த நிலையில் இன்று கோட் படத்தை விக்னேஷ் சிவனும் நயனும் பெங்களூரில் உள்ள ஒரு தியேட்டரில் போய் பார்த்திருக்கிறார்கள்.

goat

படத்தை பார்த்ததும் விக்னேஷ் சிவன் அவருடைய இன்ஸ்டா ஸ்டோரியில் கோட் படத்தை புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். இது கண்டிப்பாக தியேட்டரில் போய் அனைவரும் பார்க்க வேண்டிய படம். டபுள் கேரக்டரில் விஜயின் நடிப்பு அற்புதம். வெங்கட் பிரபு ஸ்கீரின் ப்ளே வேற லெவல். படத்தை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அதிலும் மகன் விஜய் கேரக்டர் வெறித்தனம் என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஜெயிலரிடம் மண்ணை கவ்விய கோட் வசூல்… இத நோட் பண்ணுங்க? ஷாக்கிங் ரிப்போர்ட்

மேலும் வெங்கட் பிரபு அவரது முதல் படத்தில் இருந்தே அவருடைய நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுக்காக எதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்கிறார். இது ஒரு நல்ல குணம் என்றும் வெங்கட் பிரபுவை புகழ்ந்து பாராட்டியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini