Categories: Cinema News latest news

மத்தவங்களுக்காக ஓடி ஓடி செய்றவரு! தம்பிக்காக செய்ய மாட்டாரா? லாரன்ஸ் கொடுத்த இன்பதிர்ச்சி

Actor Lawrence: தமிழ் சினிமாவில் இன்று ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் லாரன்ஸ். ஆரம்பத்தில் குரூப் டான்சராக இருந்து அதன் பிறகு மாஸ்டராக மாறி அதன் பின் ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்து நடிகராக மாறி என்று ஒரு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் சூப்பர் ஹீரோவாகவும் மாறி இருக்கிறார் லாரன்ஸ்.

லாரன்ஸ் என்று சொன்னாலே முதலில் அவருடைய படங்கள் நம் ஞாபகத்திற்கு வரவில்லை. அவர் செய்கிற அந்த சமூக சேவை தான் நாம் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக ஓடி ஓடி உதவிகளை செய்து கொண்டு வருகிறார். இதோடு மாற்றம் என்ற பெயரில் ஒரு புதிய சேவை நிறுவனத்தை தொடங்கி அதன் மூலமும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

இதையும் படிங்க: ஒரு ஹைப்பும் இல்லாத இந்தியன் 2?.. ஆடியோ லாஞ்சுக்கு அப்புறமாவது தேறுமா?.. விழி பிதுங்கிய லைகா!..

இந்த மாற்றம் சேவையில் யார் வேண்டுமென்றாலும் இணையலாம் என்ற ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார். அதன் மூலம் நேரடியாகவே மக்களுக்கு உதவி செய்து அந்த புண்ணியத்தை நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள். என்னிடம் பணத்தை கொடுக்க வேண்டாம். உங்களிடம் பணம் இருக்கிறது என்றால் நான் யாருக்கு உதவி செய்கிறேனோ அவர்களை காட்டுகிறேன் நேரடியாக நீங்களே வந்து தேவையான உதவிகளை செய்து விடுங்கள் என்றும் கூறி இருக்கிறார் லாரன்ஸ்.

அந்த அளவுக்கு மிகவும் மனிதாபிமானமுள்ள ஒரு நடிகராக மனிதராக இன்று கோலிவுட்டில் திகழ்ந்து வருகிறார் லாரன்ஸ். இன்னொரு புறம் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அவருடைய தம்பியும் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார். அவர் புதியதாக நடித்திருக்கும் திரைப்படம் புல்லட் .

இதையும் படிங்க: நாகேஷ் பண்ணிய சேட்டை… ஜெய்சங்கர், லட்சுமிக்கு இடையில் இப்படியா செஞ்சாரு?

அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன .அந்த படத்தை சமீபத்தில் பார்த்த லாரன்ஸ் தம்பியின் நடிப்பை பார்த்து பூரித்துப் போனாராம். அதன் காரணமாக தம்பிக்கு பரிசாக ரேஞ்ச் ரோவர் காரை பரிசாக அளித்திருக்கிறார் லாரன்ஸ். அது சம்பந்தமான புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Published by
Rohini