Connect with us
shankar

Cinema News

சுப்ரீம் பக்கமே நெருங்க முடியாது போல நம்ம இந்தியன் தாத்தா! ‘கல்கி’ படம் பார்த்து ஷங்கர் சொன்னதை கேளுங்க

Shankar Kamal:  நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான கல்கி படத்தை சமீபத்தில் சங்கர் பார்த்து அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அந்த ஒரு செய்தி தான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. இந்த படத்தை பார்ப்பதற்கு முன்னரே அதனுடைய எதிர்பார்ப்பு ,பிரம்மாண்டம் இவைகளை வைத்து ஷங்கர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே கல்கி திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை தொடும் என கணித்து வைத்திருந்தாராம்.

ஷங்கர் இயக்கத்தில் அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. கமல் லீடு ரோலில் நடிக்க அவருடன் சேர்ந்து சித்தார்த், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். படம் வருகிற 12-ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக பல ஊர்களுக்கு சென்ற பட குழு அவர்களது அனுபவங்களை பகிர்ந்திருந்தனர்.

இதையும் படிங்க: நீண்ட நாள் பசி! ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைக்கப் போகும் சூர்யா.. அதுவும் ஒன்னு இல்ல! ரெண்டு

இதில் ஷங்கர் சமீபத்தில் வெளியான கல்கி திரைப்படத்தை பற்றி அவருடைய கருத்தை தெரிவித்து இருந்தார். அதாவது கல்கி படத்தை பார்த்த பிறகு இந்திய சினிமாவின் பெருமை இந்த கல்கி என அவர் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு மூன்று மாதங்களுக்கு முன்பே ஷங்கர் படத்தை பற்றி கணித்து வைத்திருந்தாராம்.

கண்டிப்பாக இந்த படம் ஆயிரம் கோடி வசூலை அள்ளும் என்றும் ஒரு எட்ட முடியாத மைல் கல்லை இந்த படம் தொடும் என்றும் கணித்து வைத்திருந்தாராம். அவர் கணித்ததைப் போலவே கல்கி திரைப்படம் கிட்டத்தட்ட 700 கோடி வரை வசூலில் பெரும் சாதனை படைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் கல்கி படத்தை தாண்டி வெளியாக உள்ள கங்குவா, புஷ்பா 2 மற்றும் கூலி இந்த திரைப்படங்களும் ஒரு பெரிய வெற்றியை பெரும்.

இதையும் படிங்க: அமைதிப்படத்தின் கதை அந்த ரஜினி படம்தான்!. பல வருட சீக்ரெட்டை உடைத்த சத்தியராஜ்!..

இந்திய சினிமாவிற்கு ஒரு பெருமையை தேடி தரும் படங்களாக இந்த படங்கள் அமையும் என்றும் கூறியிருக்கிறார் சங்கர். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த லிஸ்டில் இந்தியன் தாத்தாவை தவறவிட்டீர்களே என கொளுத்தி போட்டிருக்கிறார்கள். அவர்கள் சொன்னதைப் போல கங்குவா, புஷ்பா 2, கூலி இந்த திரைப்படங்களை மட்டுமே கூறியிருக்கிறார் ஷங்கர்.

இந்தியன் 2 திரைப்படத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏற்கனவே அதன் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் காத்திருப்புக்கு பிறகு இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆவதால் இந்த கால அரசியல் சூழலுக்கு ஏற்ப அந்த படத்தில் என்னென்ன விஷயங்கள் இருக்கப் போகின்றன என்பதிலும் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் சங்கர் இந்த படத்தை பற்றி அந்த பேட்டியில் கூறவில்லை.

இதையும் படிங்க: ‘மம்மி’ பட கெட்டப் மாதிரி இருக்கே! கல்கி படத்துக்காக கமலுக்கு முதலில் போட இருந்த கெட்டப்.. வைரலாகும் புகைப்படம்

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top