பொண்டாட்டிய தேடி போகும் தல.. ஆனா திரிஷா வேறொருத்தனோட? ஆதங்கத்தை கொட்டும் ரசிகர்

டிரெண்டிங்கில் விடாமுயற்சி: எங்கு பார்த்தாலும் விடாமுயற்சி படத்தை பற்றிய பேச்சுத்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இணையம் முழுவதும் இந்தப் படத்தைத்தான் டிரெண்டிங்காக்கி வருகிறார்கள். அதுவும் இரண்டு வருடங்கள் கழித்து அஜித்தின் படம் வெளியாகியிருப்பதால் ஓவர் ஹைப்பில் ரசிகர்கள் இருந்தார்கள். எப்பவும் போல் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தை தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
ஏற்றுக்கொள்ள முடியவில்லை: படத்தை பற்றி கலவையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. வழக்கமான அஜித் இந்தப் படத்தில் இல்லை என்றும் கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு சீனில் ஆரவ்விடம் அஜித் அடி வாங்குவதை போல காட்சிப்படுத்தியிருக்கிறார்களாம். அதை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது. அர்ஜூனிடமும் அடி வாங்குகிறார். அதாவது ஓகே. ஆனால் ஆரவ்விடம் அடி வாங்குவதுதான் பார்க்கமுடியவில்லை என்று கூறி வருகிறார்கள்.
ஆரவ்விடம் அடியா?: ஆனாலும் வளரும் நடிகர் ஆரவ். அதனால் அவருக்குண்டான ஸ்க்ரீன் ஸ்பேஸை அஜித் கொடுக்க சொல்லியிருப்பார் என்று தெரிகிறது. இந்த நிலையில் விடாமுயற்சி படம் கடைசியாக என்ன சொல்கிறது என்பதை படம் பார்த்த ரசிகர் ஒருவர் மீடியா முன்பு பேசியதுதான் இப்போது வைரலாகி வருகின்றது. இதோ அவர் கூறியது:
பொண்டாட்டி மேல பாசம்: இந்தப் படத்தைப் பார்க்கும்போது என் மனசு ரெண்டும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏன்னா ஒரு பொண்டாட்டி மேல எந்த அளவுக்கு பாசம் இருக்கணும்னு இந்த படத்துல சொல்லி இருக்காங்க. தல போன்றோர் பொண்டாட்டி மேல பாசம் வச்சிருக்காங்க. ஆனா அந்த பொம்பள திரிஷா வேற ஒரு கள்ள காதலனை தேடிக்கிட்டு போறா. தலைவரு எட்டு கோடி கொடுக்கிறார் .உனக்காக. ஆனா நீ என்ன பண்ற .
வேற ஒருத்தனை வச்சிருக்க. இதெல்லாம் நியாயமா .எங்கேயாவது அடுக்குமா. ஆனா ஒரு பொண்டாட்டி மேல எந்த அளவுக்கு பாசம் இருக்கணும்னு தல சொல்லி இருக்காரு. நான் இப்ப என் பொண்டாட்டியை தேடி செங்கல்பட்டு வரைக்கும் போறேன். அவளுக்கு ஒன்னும் இல்ல. உடம்பு சரியில்ல. அவங்க அம்மா வீட்ல இருக்கா .அதனால அவளை கூட்டிட்டு வரலாம்னு தான் போறேன்.
அதனால நீங்களும் இதுபோல உங்க பொண்டாட்டி மேல பாசம் வையுங்க. யாரும் விட்டுப் பிரியாதீங்க. அதுதான் அந்த படத்துல சொல்லுது .உங்க பொண்டாட்டி மேல எந்த அளவுக்கு பாசமா நேசமா இருக்கீங்களோ அப்படியே இருங்க. அதுதான் அந்த படத்துல ரொம்ப உருகு சொல்லி இருக்காங்க.
வேற மாதிரி படம்: வேற மாதிரி படம். ஒவ்வொரு சீனும் ஆழமா நம்ம மனசுல இறக்கி இருக்காங்க. ஒரு சீனு இல்ல .படமே சீனு தான் .அதுலயும் ஆக்சன் கிங் அர்ஜுன் வந்தாரு .லாஸ்ட் பைட் வேற மாதிரி. படம் அந்த மாதிரி அல்டிமேட்டா இருக்குது. ஆனா கிளைமாக்ஸ் சீன் தான் கொஞ்சம் நல்லா எடுத்து இருக்கலாம் என படம் பார்த்த அந்த ரசிகர் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்திருக்கிறார்.