மீண்டும் தள்ளிப்போகிறதா டாக்ஸிக்?... பாவம்யா ஜன நாயகன் தயாரிப்பாளர்!
Jul 31, 2026, 17:25 IST
'தளபதி' விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தை வெங்கட்.கே.நாராயணா தனது 'KVN புரொடக்ஷன்ஸ்' மூலம் தயாரித்தார். இதை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.
இப்படம் பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த ஜூலை 23-ஆம் தேதி தான் ரிலீஸ் ஆனது. வெங்கட்.கே.நாராயணா தயாரித்துள்ள புதிய படம் 'டாக்ஸிக்'.
யாஷ் அப்பா, மகன் என 2 வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். ஆல்ரெடி பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது.
கடைசியாக வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்தனர். தற்போது, இதன் சாட்டிலைட் மற்றும் OTT ரைட்ஸை இன்னும் யாரும் வாங்கவில்லையாம். இதனால் மீண்டும் படத்தின் ரிலீஸை தள்ளி வைக்கப்போவதாக தகவல் கிடைத்திருக்கிறது.
