12 வருட காத்திருப்புக்கு பின் பொங்கல் ரேசில் இணையும் அடுத்த படம்.. இத யாருமே எதிர்பார்க்கலையே
விடாமுயற்சி:
அஜித் நடிப்பில் தயாராகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரேஸிலிருந்து பின்வாங்கிய நிலையில் ஏற்கனவே ஒரு சில நடிகர்கள் நடித்து ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கும் படங்கள் மடமடவென பொங்கல் ரேசில் இணைந்துள்ளன. அதிலும் குறிப்பாக விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் வீர தீர சூரன் திரைப்படமும் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி இருக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படமும் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக உள்ளது.
ஏற்கனவே பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் நிலையில் வணங்கான் திரைப்படமும் பொங்கல் ரிலீஸ் ஆக ஜனவரி 10ஆம் தேதி தான் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்ல உலக அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படமான கேம் சேஞ்சர் திரைப்படமும் ஜனவரி பத்தாம் தேதி தான் ரிலீஸ் ஆக உள்ளது.
இது லிஸ்டிலேயே இல்லையே:
அதனால் இந்த வருட பொங்கல் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதற்கிடையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 12 வருடங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆக வேண்டிய ஒரு திரைப்படமும் இந்த வருட பொங்கல் ரேஸில் இணைந்திருக்கின்றன.
அது சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானம் நடித்த மதகத ராஜா திரைப்படம் தான். 2013ஆம் ஆண்டில் பொங்கல் வெளியீடாக அந்த படம் வெளியாக இருந்தது. ஆனால் சில பல பொருளாதார காரணங்களால் இத்தனை வருடங்களாக அந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தன.
விஷால் சந்தானம் ஒரு சரியான கம்பேக்:
இந்த நிலையில் அதில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு மதகத ராஜா திரைப்படம் இந்த வருடம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றன. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். அஞ்சலி லீடு ரோலில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் மூலமாவது விஷாலுக்கு மீண்டும் ஒரு கம் பேக் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அது மட்டுமல்ல இதுவரை சந்தானத்தை ஹீரோவாகவே பார்த்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒரு காமெடி நடிகனாக அவர் ரசிகர்களை குதூகலப்படுத்துவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
சுந்தர் சி படம் என்றாலே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என அனைவருக்குமே தெரியும். அதனால் இந்த படம் கண்டிப்பாக ஒரு பொழுதுபோக்கு நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.