Categories: Cinema News latest news

மீண்டும் ரஜினியும் கமலும் ஒரே படத்தில் நடித்தால்? வெளியான ஷாக்கிங் தகவல்.. அட அவரே சொல்லியிருக்காரு

Rajini Kamal: 80களில் இருந்து 2 கே கிட்ஸ் வரை அனைவரும் விரும்பும் நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் ரஜினி மற்றும் கமல். கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்களாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்கள் என்று சொல்லப்படும் அஜித் , விஜய் மற்றும் இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் என அனைவருக்கும் டஃப் கொடுக்கும் நடிகர்களாக இருக்கிறார்கள் ரஜினி மற்றும் கமல்.

ஒரு பக்கம் விஜய் அஜித் படங்கள், ஒரு பக்கம் இவர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்களின் படங்கள். என்ன இருந்தாலும் இவர்கள் கட்டி வைத்த கோட்டையை இவர்களே நினைத்தாலும் தகர்க்க முடியாது. அந்தளவுக்கு தங்கள் கொடியை நிலை நாட்டி வைத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: அந்த ஒரு விஷயத்தில் சிவாஜியை முந்திக்கொண்ட சத்யராஜ்… அட அவரு சொல்றது உண்மைதான்!..

சினிமாவில் கமலுக்கு ஜூனிய ரஜினி என்றாலும் ஆரம்பத்தில் ரஜினி வில்லனாகவே நடித்து வந்தார். அதுவும் கமல் ஹீரோவாகவும் ரஜினி வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கின்றனர். அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இன்றைய சூழலில் விஜயும் அஜித்தும் மறுபடியும் சேர்ந்து நடிப்பார்களா? என்ற ஆர்வம் தான் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றன. ஆனால் நானும் கமலும் மீண்டும் இணைந்து நடிக்க முடியுமா என்ற ஆசை ரஜினியின் மனதிலே எழுந்திருக்கிறது. சிவாஜி படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் இயக்குனர் ஷங்கரிடம் ரஜினியே ‘ நானும் கமலும் மீண்டும் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும்? இது பற்றி நான் வேண்டுமென்றால் கமலிடம் பேசுகிறேன்’ என்று கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: மீண்டும் இணையும் கார்த்திக்-ஜெஸ்ஸி.. அதுவும் இந்த படத்திலா? வேற லெவலில் இருக்குமே!…

அதற்கு ஷங்கர் ‘ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால் நீங்களும் கமலும் சேர்ந்து நடிக்க வேண்டுமென்றால் அந்த கதை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் உங்களுக்கும் கமலுக்கும் அது ஏற்புடையதாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கலாம்’ என ஷங்கர் ரஜினியிடம் கூறினாராம். அதனால் வருங்காலத்தில் ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்கக் கூடிய வாய்ப்பிருக்கிறது என தெரிகிறது.

Published by
Rohini