மீண்டும் விஷால் சுந்தர் சி கூட்டணி... இவங்க மட்டும் போதுமா? சரக்கே அங்கதான இருக்கு

by Rohini |
sundarc
X

மதகஜராஜா: சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து சந்தானம், அஞ்சலி ,வரலட்சுமி சரத்குமார் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். 12 வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் இப்பொழுது பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் படம் வந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .ஒரு பிரஷ்ஷான படமாகவே இருக்கிறது என்றும் சொல்லி வருகிறார்கள் .

ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் படம்: அதுவும் பொங்கலுக்கு ஒரு செமயான டிரீட் மதகஜராஜா என படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கூறி வருகின்றனர். அது மட்டும் அல்ல நேற்று கூட ஒரு திரையரங்கில் நள்ளிரவு 12 மணி காட்சிக்கு கூட மக்கள் கூட்டம் அலை மோதியதை பார்க்க முடிந்தது. அந்த அளவுக்கு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபகாலமாக சுந்தர் சி இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள் வெற்றிவாகை சூடி வரும் நிலையில் அந்த லிஸ்டில் இப்போது மதகஜராஜா திரைப்படமும் இணைந்து இருக்கிறது .

தொடர் வெற்றி: அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான அரண்மனை 4 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக அறியப்பட்டது. அதுவும் கடந்த வருடம் எந்த ஒரு திரைப்படமும் சரியான வெற்றியை கொடுக்காத நிலையில் அரண்மனை 4 திரைப்படம் மட்டுமே பெரிய வெற்றியை கொடுத்தது. சந்தானம் நகைச்சுவையை விட்டு ஹீரோவாக இப்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நகைச்சுவை நடிகராக இருந்த நேரத்தில் எடுத்த படம் தான் மதகஜராஜா.

அது இப்போது ரிலீஸாகி அனைவருமே சந்தானத்தின் நகைச்சுவையை இப்போது நாங்கள் மிஸ் பண்ணுகிறோம் என வருத்தத்துடன் கூறி வருவதையும் பார்க்க முடிகிறது. தயவு செய்து மீண்டும் நகைச்சுவைக்கே வாருங்கள் சந்தானம் என அவருக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அந்த அளவுக்கு படங்களில் சமீப காலமாக நகைச்சுவை இருப்பதில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் விஷால் சுந்தர் சி கூட்டணி உருவாகப் போவதாக ஒரு பேச்சு கோடம்பாக்கத்தில் அடிபட்டு வருகிறது .

இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு வரை விஷால் நடிப்பில் எந்த ஒரு படமும் பிரிய வெற்றியை பார்க்கவில்லை. மார்க் ஆண்டனி திரைப்படம் மட்டுமே மாபெரும் வெற்றி அடைந்தது. அதுவும் எஸ் ஜே சூர்யா படத்தில் இருந்ததனால். அதனால் இந்த படத்தின் வெற்றி விஷாலுக்கு ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் மீண்டும் சுந்தர்சியுடன் இணைந்து படத்தில் நடிக்க அது சம்பந்தமான வேலைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் விஷால் சுந்தர் சி இவர்களுடன் சந்தானமும் இணைந்தால் மட்டுமே அவர்கள் நினைத்தது நடக்கும். அந்த படமும் பெரிய அளவில் மக்களிடையே சென்றடையும். அதனால் சந்தனமும் இந்த படத்தில் நடித்தால் மட்டுமே இவர்களின் கூட்டணி வெற்றி அடையும் என ஒரு சில பேர் கூறி வருகிறார்கள்.

Next Story