Connect with us
Vivek

Cinema News

அதுக்கு ஆசைப்பட்டு இங்க வந்து மாட்டிக்கிட்டோமே… இயக்குனரிடம் வசமாக சிக்கிய சின்னக் கலைவாணர்!..

தமிழ்த்திரை உலகில் சின்னக்கலைவாணர் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். இவர் நம்மை விட்டு நீங்கிச் சென்றாலும் இவரது நினைவுகள் தமிழ்த்திரை உலகம் உள்ளவரை நீங்காமல் இருந்து கொண்டே இருக்கும், கவுண்டமணி, செந்தில் என்ற காமெடி இரட்டையர்களின் காலத்தில் ஒத்தை ஆளாக நின்று காமெடியில் கலக்கியவர் நடிகர் விவேக்.

இன்னிக்கு செத்தா நாளைக்குப் பாலு என்ற இவரது காமெடி பஞ்ச் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தனது படங்களில் காமெடியுடன் சமூக சிந்தனைகளையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினாற்போல பக்குவமாகக் கலந்து அடித்தார் விவேக். அதனாலேயே இவரை ரசிகர்கள் சின்னக்கலைவாணர் என்று அழைத்தனர். இவரது படங்களில் ஆணுறையின் அவசியம், குழந்தைக் கல்வி, மக்கள் தொகைப் பெருக்கம் போன்ற விஷயங்களை நச்சென்று புரியும் வகையில் காமெடியாக சொல்லி அசத்தி இருப்பார்.

Vivek in PPA

Vivek in PPA

இவர் ஒரு சமயம் கவுண்டமணி, வடிவேலு நடித்த படங்கள் எல்லாம் 100 நாள்கள் ஓடுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டாராம். அது எல்லாமே இயக்குனர் வி.சேகரின் படங்கள். அப்படின்னா நாமும் அவரது படங்களில் நடித்தால் நமது படமும் 100 நாள்கள் ஓடுமே என்று நினைத்து நடிக்க ஆரம்பித்தாராம். அதன்பிறகு தான் தெரிந்ததாம். அது ஒரு ஜெயில் என்று. ஏன்னா வி.சேகரைப் பொருத்தவரை அவர் ஒரு பட்ஜெட் இயக்குனர். சிறு தயாரிப்பு படங்களையே இயக்குபவர். அவரது இயக்கத்தில் வருவது பெரும்பாலும் குடும்பக்கதைகள் தான்.

இதையும் படிங்க… தலைவர்171 வில்லன் இந்த 80ஸ் ஹீரோவா? வித்தியாசமான காம்போவா இருக்கே! லோகி புது ப்ளான்!

அவரே இப்படி சொல்வாராம். என் பணம். என் படம். நான் முதலீடு போட்டு படம் எடுக்கிறேன்னா நானே நஷ்டம் அடைய விடுவேனா என்கிறார். அதனால் அவர் தனது படங்களில் கொஞ்சம் கறாராகவே இருப்பாராம். அதாவது மொத்த படப்பிடிப்பு 60 நாள்கள் என்றால் அந்தப் படத்தில் நடிக்கும் கலைஞர்களை மொத்தமாக லாக் செய்து விடுவாராம்.

அதாவது அந்தப் படத்தின் சூட்டிங் முடியும் வரை வேறு எந்தப் படத்திற்கும் கால்ஷீட் கொடுக்க மாட்டேன் என்று எழுதி வாங்கி விடுவாராம். அப்படின்னா அது ஜெயில்தானே… சின்னக்கலைவாணர் சொல்வதும் சரி தானே.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top