கணவருடன் கழிவறை ஷேர் பண்ண மாட்டேன்… நடிகை ஐஸ்வர்யா கறார்!
நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன்:
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்த நடிகை லட்சுமியின் மகள் தான் ஐஸ்வர்யா பாஸ்கரன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .
குறிப்பாக சூர்யா நடிப்பில் வெளிவந்த ஆறு திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரம் ஏற்று நடித்து அசத்திருப்பார். அதேபோல் பிரகாஷ்ராஜ் மற்றும் திரிஷாவுடன் சேர்ந்து அபியும் நானும் திரைப்படத்தில் திரிஷாவின் தாயாராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வில்லியாக ஐஸ்வர்யா:
தனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்துக் கொடுக்கும் ஐஸ்வர்யா பாஸ்கருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் கணவரை பிரிந்து ஐஸ்வர்யா தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.
கழிவறை ஷேர் பண்ண முடியாது:
பல வருடங்களாக தனியாக வாழ்ந்து வரும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மறுமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது மறுமணம் என்பது என் அகராதியிலேயே இல்லை. அது எனக்கு விருப்பமும் இல்லை.
நான் ஒரு ஓசிடி என்னால் வேறொருவரை என்னுடைய வீட்டில் வைத்து சமாளிக்கவே முடியாது. குறிப்பாக சொல்லப்போனால் என்னுடைய கழிவறையை அடுத்தவருடன் ஷேர் பண்ணவே முடியாது என மறுமணம் குறித்த கேள்விக்கு எக்கு தப்பாக பதில் அளித்திருக்கிறார் ஐஸ்வர்யா பாஸ்கரன்.
