மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரகுமாரி பூங்குழலி கேரக்டரில் அசத்தியிருப்பார் ஐஸ்வர்யா லட்சுமி. கேரள வரவான ஐஸ்வர்யா லட்சுமி, தனுஷூக்கு ஜோடியாக ஜெகமே தந்திரம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அவருக்கு பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய அடையாளம் கொடுத்திருக்கிறது.
Aishwarya lakshmi
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பகுதியில்தான் பூங்குழலி கேரக்டர் வரும் என்றாலும், கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் தனது அழுத்தமான நடிப்பால் முத்திரை பதித்திருந்தார். பூங்குழலி கேரக்டர் இருந்திருந்தால் நிச்சயம் ஐஸ்வர்யா மாதிரிதான் இருந்திருக்கும் என பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்களும் அவருக்கு நற்சான்றிதழ் கொடுத்து பாராட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிங்களத்தமிழ், கொங்கு தமிழ் பேசி அசத்திய கமல் எந்தப்படத்தில் முத்திரை பதித்தார்? மருந்தாக அமைந்தது எது?
அவர் தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்திருக்கும் கட்டா குஸ்தி படத்தின் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார். கணவன் – மனைவி இடையே நடக்கும் ரொமான்ஸ், சண்டைகள் நிறைந்த கதையான கட்டா குஸ்தி படத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவராகவே நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான டிரெய்லரில் ஆக்ஷன் நிறைந்த கேரக்டராகவே அவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. படத்தின் புரமோஷனுக்காக சென்னையில் முகாமிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
Aishwarya lakshmi
சமீப நாட்களாக ஐஸ்வர்யா லட்சுமி பற்றி ஒரு தகவல் உலா வந்துகொண்டிருந்தது. அது என்னவென்றால், பொன்னியின் செல்வன் ரிலீஸுக்குப் பிறகு அவர், தனது சம்பளத்தைப் பல மடங்கு உயர்த்திவிட்டாராம் என்பதுதான் அந்த செய்தி. இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா லட்சுமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. `நான் சம்பளத்தை உயர்த்திவிட்டேன் என்பது வதந்திதான். அதில் உண்மையில்லை. ஒரு படம் என்பது முழுக்க முழுக்க இயக்குநரால் உருவாக்கப்படுவது. அதில், இயக்குநர் எனக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கிறாரோ… அதை நான் செய்வேன்’ என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார்.சும்மா எதையாவது கிளப்பி விடாதீங்கப்பா!
ஜெயம் ரவி…
Idli kadai:…
Vijay: கரூரில்…
Idli kadai:…
Rajinikanth: தமிழ்…