அப்படி ஒருவருடன் குழந்தை பெத்துக்கணும் - ஆசையா கூறிய ஐஸ்வர்யா லட்சுமி!
கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் கார்க்கி, கட்டா குஸ்தி , பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனை சமீபத்தை பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி... திருமணம் எனும் அமைப்பில் எனக்கு பல சிக்கல்கள் இருக்கிறது. கட்டாகுஸ்தி 2 படத்தின் போது ஒரு குழந்தையுடன் நான் நெருக்கமாக பழகினேன். என்னுடைய தாழ்மை உணர்வுகள் அதில் விழித்துக் கொண்டது.

எனக்காக வரும் ஒரு நபர் ஒரு நல்ல தந்தையாக இருப்பார். என்னை விட்டு எப்பவும் போக மாட்டார் என்று குறைந்தபட்சம் என்னால் கணிக்க முடிந்தால் அவருடன் நான் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். இது குறித்து நான் முன்பே வலுவான என்னுடைய கருத்தையும் தெரிவித்து இருக்கிறேன்.
ஆனால் தற்போது என் வாழ்க்கை முறையும் நான் மாற்றிக் கொண்டிருக்கிறேன் என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்திருக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த குறைந்தபட்ச ஆசையை பார்த்த ரசிகர்கள் நாங்க ரெடியாக இருக்கோம் மாப்பிள்ளை ரெடி ஆகி ஆறு மாசம் ஆகிவிட்டது. நீங்க ஓகே சொன்னா வண்டி கட்டிக்கிட்டு வந்து பொண்ணு கேட்போம் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
