கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்!.. ’கார்கி’ சாய் பல்லவி ரோலுக்கு பிட்டுப் போட்ட ஐஸ்வர்யா லட்சுமி!..
'கட்டா குஸ்தி 2' படத்தின் புரமோஷனை தீவிரமாக செய்து வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நடிகை சாய் பல்லவி நடித்த 'கார்கி' திரைப்படம் குறித்து பகிர்ந்த கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பேட்டியின்போது, "கார்கி படத்தை இப்போது எடுத்திருந்தால், அந்த கதாபாத்திரத்தில் நானே நடித்திருப்பேன்" என்று ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்தார். மேலும், அந்தக் கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், தற்போது நடிகையாக தனது அனுபவமும் தன்னம்பிக்கையும் அதிகரித்திருப்பதால், அப்படிப்பட்ட சவாலான வேடத்தை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
'கார்கி' திரைப்படத்தில் சாய் பல்லவி தனது இயல்பான மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றிருந்தார். அந்தக் கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் முக்கியமான பெண் மையக் கதாபாத்திரங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதே கதாபாத்திரத்தில் தற்போது வாய்ப்பு கிடைத்தால் நடித்திருப்பேன் என்ற ஐஸ்வர்யா லட்சுமியின் கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பலரும் அவரது தன்னம்பிக்கையை பாராட்டியுள்ள நிலையில், சில ரசிகர்கள் சாய் பல்லவியின் நடிப்பை யாராலும் மாற்ற முடியாது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கார்கி படத்தை ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து தயாரித்து இருந்தார். மேலும், அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் புரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஐஸ்வர்யா லட்சுமி, ஜூலை 3 வெளியாகவுள்ள தனது படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார். சற்றுமுன் வெளியான டிரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
