×

பில்லு பில்லு பில்லாமி... விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய நடிகர் அஷ்வின்!

கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் 16 என்ற படத்தில் நடித்த அஸ்வின் குமார் டிரெட் மில்லில் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு நடனமாடும் ஒரு வீடியோ கடந்த வாரம் வைரல் ஆனது. பிசுறு தட்டாமல் அப்படியே கமல் போலவே கெட்டப் போட்டு டான்ஸ் ஆடிய அந்த விடேய் செம வைரலானது.

 

அதனை கமலே பார்த்து தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் செய்த  நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை என கூறி பாராட்டினார்.

இந்நிலையில் தற்ப்போது தளபதி ரசிகர்களின் கோரிக்கை ஏற்று விஜய்யின் மாஸ்டர் பட வாத்தி கம்மிங் பாடலுக்கு டிரெட்மில்லில் நடனம் ஆடி வீடியோவிடியோவை ட்விட்டரில் வெளியிட்டு "என் பிறந்தநாளான இன்று என் டிரெட்மில் டான்ஸ் வீடியோவை வைரலாக்கி, அது லெஜன்டை சென்றடைய வைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது டிரெட்மில்லில் வாத்தி கமிங் என்று கூறி பதிவிட அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து குவிந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News