aishwarya
தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு சிறந்த நடன கலைஞர்,தொகுப்பாளினி என பன்முகம் கொண்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ் .இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார் .
இதனை தொடர்ந்து அட்டகத்தி ,தர்மதுரை ,காக்கா முட்டை ,குற்றமே தண்டனை, கனா, ரம்மி போன்ற மக்களின் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார் ஐஸ்வர்யா ராஜேஷ் .அதிலும் குறிப்பாக கனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்த சினிமா உலகில் இவருக்கு என ஒரு தனி அந்தஸ்து கிடைத்தது .
இதையும் படிங்க: 30 வருஷத்துக்கு முன்னாடி இருந்த அதே காதல்!.. இப்ப இன்னும் அதிகமா?!.. யாரப்பா சொல்றாங்க திரிஷா!…
அதோடு சமீப காலமாக இவர் பெண்களை மையப்படுத்தி வரும் கதாபாத்திரத்தில் நடித்து மேலும் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறார். நடிகைகளுக்கு பெரும்பாலும் பிடித்த நடிகையாகவே ஐஸ்வர்யா ராஜேஷ் திகழ்ந்து வருகிறார். அந்த அளவுக்கு மிகவும் எதார்த்தமாக நடிப்பதில் மிகச் சிறந்த நடிகை இவர். ஆனால் நயன்தாரா, திரிஷா, சமந்தா போன்ற நடிகைகளுக்கு கிடைக்கும் வரவேற்பு இன்றுவரை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைக்கவில்லை.
இருந்தாலும் அதைப்பற்றி என்றைக்குமே அவர் கவலைப்பட்டதில்லை .தனக்கு வரும் கதாபாத்திரம் மக்களிடம் பேசப்படுகிறதா என்பதை மட்டும் பார்த்து அந்த மாதிரி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் சங்கரராந்திக்கு வஸ்துன்னம் என்ற படத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்தின் ப்ரோமோஷன் சமீபத்தில் தான் நடந்தது.
aishwarya 1
இதையும் படிங்க: 30 நிமிடம் காத்திருந்து!.. விதவிதமா ஆர்டர் பண்ணி வெளுத்து கட்டிய நயன்?.. அதுவும் இப்படி ஒரு இடத்திலயா?…
இந்த படத்தில் ஹீரோவாக வெங்கடேஷ் நடிக்கிறார் .இவருடன் சேர்ந்து இந்த படத்தில் இன்னொரு நாயகியாக மீனாட்சி சௌத்ரியும் நடிக்கிறார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி போலீஸ்கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனால் ப்ரொமோஷனுக்கும் போலீஸ் கெட்டப்பிலேயே வந்திருந்தார். அதைப்போல ஐஸ்வர்யா ராஜேஷ் கழுத்தில் தாலியுடன் நெற்றியில் குங்குமம் இட்டு ஒரு திருமணமான பெண் போன்ற கெட்டப்பிலேயே வந்திருந்தார். அதை பார்த்ததும் அனைவருக்கும் ஷாக் ஆகிவிட்டது. இதுதான் டெடிகேஷன் என்பதைப்போல படத்தில் எந்த மாதிரி கெட்டப்பில் நடித்தாரோ அதே மாதிரி பட ப்ரொமோஷனிலும் கலந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…