×

சேரி விஷயத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் - இரட்டை முகத்தை கிழிக்கும் நெட்டிசன்ஸ்!

விமர்சனத்திற்குள்ளாகும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

 

‘நான் தமிழ் பேசும் இந்தியன்’ என எழுதப்பட்ட டீ சர்ட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், ஹிந்தி தெரியாது போடா என எழுதப்பட்ட டீ சர்ட்டை ‘மெட்ரோ’ பட நடிகர் சிரிஷும் அணிந்திருந்த புகைப்படம் வெளியான பின்னரே இந்த ஹேஷ்டேக் வைரலானது. இதற்கிடையில், #ஹிந்தி_தெரியாது_போடா  என பொறிக்கப்பட்டிருந்த டீ சர்ட்டை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் அணிந்து போஸ் கொடுத்தார்.

ஆனால், இதற்கு முன்னர் மும்பையில் ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்ட போது, எனக்கு ஹிந்தி தெரியும் எனக்கூரி சில வாக்கியங்களை ஹிந்தியில் பேசியும் காண்பிக்கும் வீடியோவை சில பாஜக ஆதரவாளர்கள் பகிர்ந்து ‘இன்னும் எத்தனை பேரை ஏமாற்றுவீர்கள்?’ என பதிவிட்ட அந்த வீடியோ வைரலானது.

இந்நிலையில் தற்ப்போது தனக்கு சேரி பற்றி ஒன்றுமே தெரியாது? என கூறி பந்தா காட்டியள்ள வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆனால், இதற்கு முன் மேடை ஒன்றில் தான் வளர்ந்து வந்த அனுபவத்தை பற்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ் "தான் சேரியில் பிறந்து வளர்ந்தவள் என கூறினார். இப்படி தொடர்ந்து இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசி வரும் அவரின் இரட்டை முகத்தை கிழித்து உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News