Oh Sukumari Box Office : 5 நாட்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஓ சுகுமாரி' செய்த வசூல் இவ்ளோதானா?
Jul 22, 2026, 08:32 IST
5 நாட்களில் 'ஓ சுகுமாரி' செய்த வசூல் தெரியவந்துள்ளது. கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
'தீயவர் குலை நடுங்க' படத்துக்கு பிறகு இவர் நடித்துள்ள புதிய படம் தான் 'ஓ சுகுமாரி'. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் உருவாகியிருக்கும் இப்படத்தை இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கியுள்ளார்.
கடந்த ஜூலை 17-ஆம் தேதி தான் இந்த படம் தியேட்டர்களில் வெளி வந்தது. ரொமான்டிக் காமெடி ஜானர் படமான இதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகர் திருவீர் நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.57 லட்சம். 5 நாட்கள் ஆகியும் வசூலில் கொஞ்சம் தான் முன்னேற்றம் இருக்கிறது. அதன்படி இதுவரை உலக அளவில் ரூ.1.72 கோடி தான் வசூல் செய்திருக்கிறது.
