ஐஸ்வர்யா ராஜேஷ் ஃபேன்ஸுக்காக ஓ சுகுமாரி OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 
Oh sukumari

'காக்கா முட்டை, தர்மதுரை' படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கு தமிழ்நாட்டை போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. 

இவர் நடிப்பில் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் உருவான 'ஓ சுகுமாரி' திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

ரொமான்டிக் காமெடி ஜானர் படமான இதில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் திருவீர் நடித்திருந்தார். இதை இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கியிருந்தார்.

தற்போது, ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபேன்ஸுக்காக இந்த படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைம் வீடியோவில் வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியாகிறதாம்.

From Around the web