ஓ சுகுமாரியாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்!.. வடசென்னை 2 வந்தால் தான் இந்த பக்கம் வருவாரு போல!..
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனது இயல்பான நடிப்பால் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது புதிய தெலுங்கு திரைப்படமான ‘ஓ...! சுகுமாரி’ படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளார். மேலும், இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘ஓ...! சுகுமாரி’ திரைப்படம் நகைச்சுவை மற்றும் அதிரடி கலந்த கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் வித்தியாசமான படைப்பாகும். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன், ‘தி கிரேட் ப்ரீ வெட்டிங் ஷோ’ மூலம் கவனம் பெற்ற நடிகர் திருவீர் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, முரளிதர் கவுட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தை இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கியுள்ள நிலையில், மகேஸ்வர ரெட்டி மூலி தனது கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் பரத் மஞ்சி ராஜு படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள டீசர், கிராமத்து சூழலில் நடக்கும் குறும்புகள், நகைச்சுவையான சம்பவங்கள் மற்றும் அதிரடியான திருப்பங்களை சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷின் வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகள் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், ‘ஓ...! சுகுமாரி’ திரைப்படமும் அவருக்கு மற்றொரு வெற்றிப்படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளையும், நேர்மறையான கருத்துகளையும் பெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
