Connect with us

Cinema News

என்கிட்ட அப்படி மட்டும் நடந்துக்கிட்டா அவ்வளவுதான்!.. ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்றத கேளுங்க!….

சுழல் வெப்சீரிஸில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதுதொடர்பான புரமோஷனில் இயக்குநர்கள் நடிகர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தன்னிடம் வேலை வாங்க என்ன செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

விக்ரம் வேதா படத்தை இயக்கிய இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி எழுத்தில் உருவாகி உள்ள சுழல் வெப்சீரிஸ் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.

அந்த வெப்சீரிஸை இயக்குநர் ராஜமெளலி உள்ளிட்ட பலர் பாராட்டி உள்ளனர். இன்ஸ்டாகிராமில் இளம் நடிகைகள் எல்லாம் அந்த வெப்சீரிஸை ஆர்வத்துடன் பார்ப்பது போன்ற பெயிட் புரமோஷனையும் ஜோராக நடத்தினர்.

8 எபிசோடுகள் கொண்ட அந்த வெப்சீரிஸ் சொல்ல வந்த விஷயத்தை நறுக்கென சொல்லாமல் ரம்பம் போல 6 மணி நேரம் இழுத்தடித்து சொல்லி இருப்பதாகவே நெட்டிசன்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், தன்னிடம் எப்படி செட்டில் வேலை வாங்க முடியும் என்றும் இயக்குநர்கள் படப்பிடிப்பின் போது மூஞ்சியை காட்டி விட்டால் தன்னால் நடிக்கவே முடியாது என்றும், செம கூலாகவே இதுவரை தன்னை இயக்கிய இயக்குநர்கல் டீல் செய்துள்ளனர் என்றும் அதில், புஷ்கர் – காயத்ரியை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

எழுதி கொடுத்த வசனத்தை அப்படியே பேசுங்க.. ஸ்க்ரிப்டில் இருப்பது போன்றே நடந்து வாங்கன்னு சொன்னா கூட தான் கடுப்பாகி விடுவேன் என்றும், தன்னை எந்தளவுக்கு கூலாக வைத்து இருக்கிறார்களோ அப்போதான் தன்னால் இயல்பாக நடிக்க முடியும் என்றும் அவர்கள் டென்ஷனை வெளிப்படுத்தினால், நடிகர்களின் நடிப்பிலும் அது நிச்சயம் வெளிப்படும் என்றும் கூறியுள்ளார்.

சுழல் வெப்தொடரில் நெருங்கிய உறவினர் ஒருவாராலே பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் போல்டான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார். மேலும், மலையாள ரீமேக்கான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்திலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top