தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே விவாகரத்துகள் அதிகமாக தான் நடந்து வருகிறது. அதில் சமீபத்தில் பலரும் வியந்த பிரிவு என்றால் அது தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் 17 வருட பிரிவு தான்.
இவர்கள் பிரிவால் எப்படி ரசிகர்கள் வருத்தப்பட்டார்களோ அதை விட அதிகமாவே அவர்களது குடும்பத்தினர் வருத்தப்பட்டு வருகின்றனர். இருவீட்டார் குடும்பத்தினரும் தனுஷ் – ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனராம்.
ஆனால், இருவரும் அவர்களது பாதையில் தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்து விட்டனர். தனுஷ் தனதுதிரைப்படங்களில் அடுத்தடுத்து கவனம் செலுத்தி வருகிறார். அதே போல ஐஸ்வர்யா , மீண்டும் சினிமாவில் இயக்கம் பக்கம் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டார்.
அண்மையில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா உடன் இளையராஜா இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தார். அதில் மூத்த மகன் யாத்ரா அப்படியே தனுஷை போலவே இருந்தார். கிட்டத்தட்ட பட்டாஸ் படத்தில் மீசை தாடியில்லாமல் இருக்கும் தனுஷ் போல அப்படியே இருந்தார். இதனால் சிலர் அடுத்து ரஜினி, தனுஷ் வரிசையில் இன்னோர் நாயகன் வந்துவிட்டார் என கூறினர்.
இதையும் படியுங்களேன் – நான் தமிழ் இயக்குனர்., கண்டிப்பா அத பண்ணுவாங்க.. உண்மையை உளறிய வெங்கட் பிரபு.!
தற்போது அந்த செய்திகளை உண்மையாக்கும் முயற்சிகளில் ஐஸ்வர்யா ஈடுபட்டு வருகிறாராம். ஆம் தனது மகன் யாத்ராவை ஹீரோவாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க ஆயத்த மாகி வருகிறாராம் ஐஸ்வர்யா. ஒரு வேளை இது உண்மையாக இருந்தால் விரைவில் அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…