Categories: Cinema News latest news

அங்க பாத்ரூம் கூட இருக்காது…. ஷூட்டிங் அனுபவங்களை பகிர்ந்த பிரபல நடிகை…!

பளபள மேனியுடன் காட்சியளித்தால் தான் திரையில் ஜொலிக்க முடியும் என்ற எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்து கருப்பான பெண்களும் ஹீரோயினாக ஜொலிக்கலாம் என நிரூபித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பிற நடிகைகள் நடிக்க தயங்கும் கேரக்டரில் அசால்ட்டாக நடித்து பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா.

தற்போது பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்பகாலத்தில் தனது ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்களை சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு பண்ணையாரும் பத்மினியும் படத்துலதான் கேராவேனே கொடுத்தாங்க. அதுக்கு முன்னாடி நடிச்ச எந்த படத்துக்குமே எனக்கு கேராவேன் கொடுக்கல.

காக்கா முட்டை படத்துல நடிக்கும்போது அந்த ஏரியால சின்னதா ஒரு லாட்ஜ் இருந்தது. அதுல ஒரே ஒரு ரூம்ல தான் எல்லோருமே தங்கி இருந்தோம். அதே மாதிரி ரம்மி படத்துலயும் கேரவேன் இல்லை. அந்த படத்துல கூட மேல கூட வச்சு பாட்டு எடுக்கும்பொழுது லொகேஷன்ஸ் எல்லாமே பாறையா தான் இருக்கும்.

அங்கலாம் பெட் போர்ட் வண்டிலதான் காஸ்டியூம் மாத்தணும். இதுல கழிவறைதான் பெரிய தலைவலியா இருக்கும். அதனால நான் தண்ணியே குடிக்க மாட்டேன். ஆனா இப்போ பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தயாரிப்பாளர் தரப்புல நிறைய வசதிகள் செய்து கொடுக்குறாங்க.

எனக்கு விஜய் சார், அஜித் சார் கூட நடிக்க ஆசையாதான் இருக்கு. ஆனால் யாரும் என்ன கூப்பிடல. ஒரு வேளை எனக்கான கதாபாத்திரம் அது இல்லையோ என்னவோ” என மிகவும் எதார்த்தமாக தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini