Categories: Cinema News latest news

ஷாக்கிங்.. அபிஷேக் பச்சன் வீட்டை விட்டே வெளியேறிய ஐஸ்வர்யா ராய்.. விவாகரத்து வதந்தி உண்மையானதா?..

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை நடிகை ஐஸ்வர்யா ராய் பிரியப் போவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், தற்போது கணவரின் வீட்டை விட்டே ஐஸ்வர்யா ராய் வெளியேறி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர், குரு, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களிலும் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ், எந்திரன் உள்ளிட்ட படங்களிலும் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: சலார் பிரபாஸா இது!.. படத்துல பிரசாந்த் நீல் ரொம்ப பட்டி டிங்கரிங் பார்த்துருப்பாரு போல.. தப்பிக்குமா?

பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். பல வருடங்களாக அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா ராய்க்கு ஆராத்யா எனும் மகள் உள்ளார்.

சமீப கால பாலிவுட்டில் அமீர்கான், ஹ்ரித்திக் ரோஷன் என பிரபலங்கள் விவாகரத்து செய்து வரும் நிலையில், தற்போது அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் அந்த முடிவுக்கு வந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: இதனாலதான் விஜயகாந்த் இப்படி ஆயிட்டான்!.. கேப்டனின் உடல்நிலை மீது ஆதங்கப்பட்ட ராதாரவி..

இதெல்லாம் வெறும் வதந்திதான் என ரசிகர்கள் நம்ப மறுத்து வந்த நிலையில், தற்போது பாலிவுட் மீடியாக்கள் அபிஷேக் பச்சன் வீட்டில் இருந்தே ஐஸ்வர்யா ராய் வெளியேறி விட்டதாக ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளனர்.

கணவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் தான் காரணமா? அல்லது அபிஷேக் பச்சன் வேறு ஏதாவது நடிகையுடன் தொடர்பில் இருக்கிறாரா? என பல ரூமர்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

Saranya M
Published by
Saranya M