தமிழ் சினிமாவில் நன்கு நடிக்க தெரிந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். எந்தமிழ் சினிமா பின்புறமும் இல்லாமல் தானாக படிப்படியாக முன்னுக்கு வந்து தற்போது முன்னணி நடிகைகளின் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஆரம்பத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து, அதன் பின்னர் வாய்ப்பு தேடி அட்டகத்தி திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்து, அதன் பிறகு இரண்டாம் நாயகி அதன் பிறகு முதன்மை நாயகி என உயர்ந்தார். ஆரம்ப காலகட்டத்திலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக காக்கா முட்டை திரைப்படத்தில் தைரியமாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதையும் படியுங்களேன் –தனுஷ் செய்த வேலையில்தான் பாரதிராஜாவுக்கு இந்த நிலைமையா?!..இது என்னடா புதுக்கதை…..
இவர் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், தனது வாழ்வில் நடந்த மிகவும் சோகமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், ‘நான் சிறு வயது இருக்கும் போது எனது அப்பா இறந்து விட்டார். அம்மா மட்டும்தான் எங்களை வளர்த்தார்.
இதையும் படியுங்களேன் – தலைவர் ரஜினி இறங்கி அடிக்க ஆரம்பிச்சுட்டார்… இனி டான் ஆட்டம் தான்.! விரைவில் 170…
அதன் பிறகு ஒரு பெரிய விபத்தில் எனது இரண்டு அண்ணன்களும் இறந்து போய்விட்டனர். அப்போது குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு வந்தது. அதனால்தான் கடுமையாக உழைத்து சினிமாவில் இந்த நிலைமையில் இருக்கிறேன்.’ என மிகவும் தன்னம்பிக்கையுடன் அதில் பதிவிட்டு இருந்தார்.
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…