Categories: Cinema News latest news

அடுத்த அசுரனாக மாறிவரும் ஐஸ்வர்யா ரஜினி.! வீடியோவில் வியர்க்க வியர்க்க என்னென்ன செய்றார் பாருங்க…,

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக சுமார் 18 வருடங்களாக வாழ்ந்து வந்திருந்த நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவர்கள் தங்களது 18 வருட மண வாழ்க்கையை சில மாதங்களுக்கு முன் பிரிவதாக அறிவித்து விட்டனர்.

அதன் பின்னர் தற்போது தனுஷ் தனியாக வாழ்ந்து வருகிறார் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வெவ்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.  அதேபோல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் தனக்கு பிடித்தமான சினிமாத்துறையில் தீவிரமாக இயங்க ஆரம்பித்து வருகிறார்.

ஐஸ்வர்யா இயக்கத்தில் அண்மையில் பயணி எனும் ஆல்பம் வீடியோ வெளியானது. அதில் நடன அமைப்பாளர் ஜானி மாஸ்டர் நடித்து இருந்தார். அந்த ஆல்பம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்களேன் – என்னய்யா கேள்வி கேட்டுகிட்டே இருக்கீங்க.., இந்தா பாத்துக்கோங்க.! ஆதாரங்களை லீக் செய்த சேதுபதி.!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அவர் சைக்கிளில் செல்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருவார். அதுபோல தீவிரமாக வியர்க்க விருவிருக்க முயற்சி செய்து வருவதை ஒரு வீடியோவாக பதிவிட்டு உள்ளார்.

இதனை பார்த்த பலர் அந்த வீடியோவை டவுன்லோட் செய்து அதற்கு பின்னால் அசுரன் பின்னணி இசையை சேர்த்து,  அடுத்த அசுரனாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மாறி வருகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan