×

அஞ்சலிக்கு திருமணமா? ஆனால் நாம் எதிர்பார்த்த அந்த நடிகர் இல்லையாம்...

அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விரைவில் அவரது திருமணம் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
 
1514459046_balloon-upcoming-tamil-horror-thriller-movie-written-directed-by-sinish-produced-by-dhilip

ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.

இதன்பின் அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விரைவில் அவரது திருமணம் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் புதிய தகவல் தெலுங்கு திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து நடிகை அஞ்சலி தரப்பில் இருந்து உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News