டிமாண்டி காலனியுடன் இணையும் காஞ்சனா

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களை குடும்பமாக பார்க்கும் வகையில் படம் எடுத்து வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் எடுத்த முனி, காஞ்சனா
 
lawrance

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களை குடும்பமாக பார்க்கும் வகையில் படம் எடுத்து வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் எடுத்த முனி, காஞ்சனா 1, காஞ்சனா 2 மற்றும் 3 ஆகியவை மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது காஞ்சனா 4 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  

லாரன்ஸ் போன்றே   டிமாண்டி காலனி , இமைக்கா நொடிகள்  போன்ற வித்தியாசமான மற்றும் த்ரில்லர் திரைப்படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து.  தற்போது இவர்கள் இருவரது கூட்டணியும் முதன்முறையாக ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேண்டஸி ஹாரர் ஸ்டைலில் உருவாகும் இந்த படத்தில் வழக்கமான லாரன்ஸ் பட பாணியில் இருந்து விலகி, அஜய் ஞானமுத்துவின் மேக்கிங்கில் லாரன்ஸ் மிகவும் சீரியஸான மற்றும் பவர்புல்லான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

From Around the web