Dark Box Office : 3 நாட்களில் அஜய் கார்த்தியின் 'டார்க்' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Jul 6, 2026, 09:05 IST
3 நாட்களில் 'டார்க்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. 2023-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன 'டாடா' மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கணேஷ்.கே.பாபு.
இவர் இப்போது ரவி மோகனை வைத்து 'கராத்தே பாபு' படத்தை இயக்கி வருகிறார். கணேஷ்.கே.பாபு கதை எழுதி, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'MG ஸ்டுடியோஸ்' மூலம் தயாரித்துள்ள புதிய படம் 'டார்க்'.
கடந்த ஜூலை 3-ஆம் தேதி தியேட்டர்களில் வெளி வந்த இப்படத்தில் ஹீரோவாக அஜய் கார்த்தி நடித்துள்ளார். புதுமுக இயக்குநர் கல்யாண்.கே.ஜெகன் திரைக்கதை எழுதி இதனை இயக்கியுள்ளார்.
சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் ஜானர் படமான இதில் நட்டி, கே.பாக்யராஜ், அஞ்சனா நேத்ரன், VTV கணேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது, இப்படம் கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ.72 லட்சம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
