Dark Box Office : 2 நாட்களில் அஜய் கார்த்தியின் 'டார்க்' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
2 நாட்களில் 'டார்க்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் புதிய படம் தான் 'டார்க்'.
இப்படம் நேற்று முன் தினம் (ஜூலை 3-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இதில் ஹீரோவாக 'காளிதாஸ் 2' புகழ் அஜய் கார்த்தி நடித்திருக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் மறைந்த நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ், அஞ்சனா நேத்ரன், VTV கணேஷ், நட்டி நடித்திருக்கிறார்கள்.
அஜய் கார்த்தியின் தந்தை '5 ஸ்டார்' கே.செந்திலுடன் இணைந்து 'டாடா' புகழ் இயக்குநர் கணேஷ்.கே.பாபு 'MG ஸ்டுடியோஸ்' மூலம் இதை தயாரித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் கல்யாண்.கே.ஜெகன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு மனு ரமேஷன் இசையமைத்துள்ளார். எந்தவித எதிர்பார்ப்புமின்றி இப்படத்தை பார்க்கும் ஹாரர் ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம் என்று கூறி வருகின்றனர். கடந்த 2 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.40 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
