×

ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய அஜீத்... இருந்தாலும் அன்பு கட்டளையை ஏற்றுக்கொள்கிறோம்!

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்தில் நடித்து வந்தார். ஷூட்டிங் நடந்து வந்த சமையத்தில் அஜித் பொது இடங்களில் இருந்த ஒருசில புகைப்படங்கள் வெளியானதே தவிர அதிகாரப்பூர்வமாக அவரது லுக் இன்னும் வெளியாகவில்லை.

 

இந்நிலையில் வரும் மே 1 அஜித்தின் பிறந்தநாள் வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் ஆதவ் கண்ணதாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அஜித்தின் அலுவலகத்தில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாக கூறிய அவர், அவரது பிறந்தநாளில் ரசிகர்கள் யாரும் ஒரே புகைப்படத்தை டிபியாக பயன்படுத்த வேண்டாம் என்று கோட்டுக் கொண்டுள்ளதாகவும், கொரோனா சமையத்தில் அதை கொண்டாட வேண்டாம் என்றும் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.

இதனால் அதிர்ந்துபோன ரசிகர்கள் ஆதவ் கண்ணதாசனின் ட்வீட்டுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். இது வருத்தமான செய்தி என்றாலும் அஜித்தின் வார்த்தைகளை மதிப்பதால் இதை பின்பற்றி நடக்க வேண்டும் என்று ஆதவ் கண்ணதாசன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ள  நிலையில் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கல்வி, திரையரங்கு, திரைத்துறை, சிறு மற்றும் பெருந்தொழில் பாதிப்படைந்துள்ளது. விரைவில் நிலை மீள ஆய்வுகளும் பாதுகாப்பு நடவடிக்கையும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


 

From around the web

Trending Videos

Tamilnadu News