×

அஜீத் சார் எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க - பொங்கியெழுந்த கஸ்தூரி

தல அஜித் ரசிகர்களுக்கும், நடிகை கஸ்தூரிக்கும் இடையே எழுந்துள்ள மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் அஜித் ரசிகர்கள் சிலர் கஸ்தூரியை ஆபாசமாக விமர்சிக்க துவங்கியதிலிருந்து, அவருக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே மோதல் எழுந்து வருகிறது.  தற்போது அது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. 

கஸ்தூரியை சிலர் ஆபாசமாக விமர்சிக்க இதனால் கோபமடைந்த அவர்  அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை டேக் செய்து ‘உங்கள் மௌனத்தின் விளைவை பாருங்கள்..அவளால என்ன பண்ண முடியும் , கதறுவதை தவிர என்ற திமிர் எங்கேயிருந்து வந்தது?  உங்கள் மௌனத்தில் இருந்து வந்தது. ’ எனக்கூறி தமிழக காவல்துறைக்கு புகாரும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரை ஆபாசமாக விமர்சித்த அஜித் ரசிகர் இலங்கை வவுனியாவை சேர்ந்தவர் என்பதால் ‘வவுனியா மற்றும் ஈழத்து  சொந்தங்களே, உங்களுக்கு இந்த அற்பன் யாரென்று தெரிந்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும்’ எனவும் டிவிட் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News