×

யாரும் பார்க்காத அஜீத் வீடியோ... இணையத்தில் கசிய விட்ட நண்பர்!

நடிகர் அஜித்தின் பிறந்தநாள் நேற்று. அதற்காக அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்தனர்.

 

#HBDDearestThalaAJITH என்ற ஹேஸ்டேக்கில் பல மில்லியன் ட்வீட்கள் பதிவான நிலையில் தேசிய அளவில் நேற்று அஜித் தான் ட்ரெண்ட். மேலும் அஜித்துடன் பணியாற்றியுள்ள சினிமா துறை பிரபலங்கள் பலரும் அஜித் பற்றி பேசி ட்விட்டரில் வாழ்த்து கூறி இருந்தனர்.

இந்நிலையில் அஜித்தின் நண்பர் Suhail Chandhok தான் அஜித் உடன் பைக் ஓட்டியபோது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

"அஜித் சார் உடன் 2013ல் வீரம் ஷூட்டிங் சமயத்தில் சென்று பைக் ரைடு என்னுடைய பேவரைட். நாங்கள் 500 கிலோமீட்டர் ஒன்றாக ஹெல்மெட்டுக்கு உள்ளே intercom வைத்து அதன் மூலமாக பேசிக்கொண்டு பைக் ஓட்டினோம். அது ஒரு சிறப்பான அனுபவம். அவரிடம் இருந்து வாழ்க்கை பற்றியும், சோதனைகளை எப்படி கடந்து வருவது என்பது பற்றியும் நிறைய தெரிந்துகொண்டேன்."

From around the web

Trending Videos

Tamilnadu News