×

`சூரரைப் போற்று’ சூர்யாவைப் புகழ்ந்து தள்ளிய அஜிங்கியா ரஹானே

இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் அஜிங்கியா ரஹானே சூரரைப் போற்று படத்தைப் பார்த்து பாராட்டியிருக்கிறார். 
 

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையிலும் வரலாற்று வெற்றியப் பதிவு செய்தது ரஹானே தலைமையிலான இளம் இந்திய அணி. இதையடுத்து நாடு திரும்பிய இந்திய அணிக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. 


இந்தசூழலில், ரஹானா சூரரைப் போற்று படத்தைப் பார்த்து பாராட்டியிருக்கிறார். ஆங்கில சப்டைட்டிலுடன் படத்தைப் பார்த்ததாகவும், அது தனக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் ரஹானே கூறியிருக்கிறார். சூரரைப் போற்று படத்தின் சூர்யா மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும் ரஹானே மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். 


சுதா கொங்கரா இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியான சூரரைப் போற்று மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பானபோதும் பெரிய அளவிலான வரவேற்பு அந்தப் படத்துக்குக் கிடைத்தது. ஆஸ்கர் திரையிடலுக்குத் தேர்வாகியிருக்கும் சூரரைப் போற்று படக்குழு, ரஹானே பாராட்டால் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News