×

அஜித் என்ன அவ்ளோவ் பெரிய நடிகரா...? தல ரசிகர்களை கடுப்பேற்றிய பியா பாஜ்பாய்!

தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகராக விளங்கி வரும் நடிகர் அஜித் கோடானகோடி ரசிகர்களுக்கு சொந்தக்காரர் இவரது படங்கள் வெளிவரும் நாளில் ரசிகர் திருவிழா போல் கொண்டாடி மகிழ்வார். அஜித்துடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற கனவில் தொடர்ந்து சினிமாவில் பயணிக்கு நடிகைகளையும் நம்மால் பார்க்க முடிகிறது.

 

தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான அஜித் வேற்று மொழி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டியதில்லை. ஆனால்,  இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற  மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி ஹிட் அடித்து அஜித்திற்கு பேரும், புகழும் பெற்றுத்தந்துள்ளது.

இப்பேற்பட்ட திரை ஜாம்பவானாக ஜொலித்துக்கொண்டிருக்கும் அஜித் படங்களில் தலை காட்டுவதுடன் சரி வேறு எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார். அதனால் தான் என்னவோ அவரை வெளியில் எங்காவது பார்த்தாலே ரசிகர்கள் பரவசப்பட்டுவிடுவார்கள். அவருடன் செல்பி எடுத்து இணையத்தில் வெளியிட்டு தல அவர்களின் புகழ் பாட ஆரம்பித்துவிடுவார்கள்.

இப்படி அஜித்தை பற்றிய நிறைய நல்ல விஷயங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம். பாலிவுட்டில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அக்கட தேசத்து திரைத்துறையினர் அஜித் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். இது இப்படி இருக்க பிரபல நடிகை பியா பாஜ்பாய் ஏகன் படத்தில் அஜித்துடன் நடித்தது குறித்து பேசியுள்ளார்.

அதில், நான் அந்த படத்தில் நடித்த போது அஜித் அவ்வளவு பெரிய நட்சத்திரம் என்பது தெரியாது என்னை படப்பிடிப்பிற்காக அழைத்தபோது வெளியில் ரசிகர்கள் உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தனர். அதன்பின்னர் தான் அவர் எவ்வளவு பெரிய ஸ்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன். அஜித் என்னிடம் மிகவும் நன்றாக பழகினார். செட்டிலேயே நான் தான் மிகவும் சின்னப்பெண். அதேபோல நான் அப்போதுதான் அறிமுகமானவர். என்னை அப்படி பாதுகாத்து என்னிடம் அவ்வளவு என்னை நடந்து கொண்டார். படப்பிடிப்பில் இருக்கும்போது நாங்கள் ஒன்றாக அமர்ந்து எங்களின் தொழிலைப் பற்றி பேசுவோம். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அதில் ஒருவர் சூப்பர் ஸ்டாராக இருந்தும் எப்படி இவ்வளவு அடக்கமாக இருக்க முடியும் என்பதையும் புரிந்துகொண்டேன் என்று கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News