Categories: Cinema News latest news

அஜித் படத்தை கைவிட்டு விக்னேஷ் சிவன் என்ன காரியம் செய்றார் பாருங்க… விரக்தியில் ரசிகர்கள்…

சென்னைஅருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக செஸ் ஒலிம்பியா போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் தொடக்க விழா தமிழ் சினிமா ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு புகழ்பெற்ற சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  நடைபெற உள்ளது.

இந்த செஸ் விளையாட்டு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பெரிய பெரிய விவிஐபிக்கள் வரவுள்ளனர். இரண்டு பெரிய இசையமைப்பாளர்கள் இசை நிகழ்ச்சி நடத்தவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இந்த தொடக்க நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து இயக்க உள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதே போல் தான் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சியை கெளதம் மேனன் இயக்கினார் என செய்தி வெளியானது.

இதையும் படியுங்களேன் – ப்ளீஸ்.. அந்த சாப்பாட்டை சாப்பிடாதீங்க.. மீனா வீட்டில் மன வேதனையில் பேசிய மன்சூர் அலிகான்.!

இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் சற்று அதிருப்தி ஆகிவிட்டனர். ஆம், இன்னும் சில மாதங்கள் தான் AK -62  ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த சமயம் திரைக்கதை மெருகேற்றும் பணிகளை மேற்கொண்டு படத்தை மெருக்கேற்றாமல் அதனை கைவிட்டு இங்கு வந்து செஸ் போட்டியை இயக்க இருக்கிறாரே என புலம்பி வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan