Categories: Gossips latest news

கடுப்பாகிய படக்குழு.! உங்க சகவாசமே வேணாம் என நடையை கட்டிய அஜித்குமார்.!

வலிமை திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இயக்குனர் H.வினோத் தனது கதையில் எந்தவித சமரசமும் இல்லாமல் முழுக்க முழுக்க தனது திரைப்படமாக உருவாக்கி வரும் திரைப்படம் தான் அஜித்தின் 61வது திரைப்படம்

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதிராபாத்தில் செட் அமைத்து இரவு பகல் பாராமல் கடுமையாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 55 நாட்கள் இரவு பகல் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்றதாம்.

அஜித்தின் திரைப்படம் வழக்கமாக ஹைதிராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுவது வழக்கம். வீரம், வேதாளம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என பல படங்கள் அங்கு ஷூட் செய்யப்பட்டன.

இதையும் படியுங்களேன் – அதெல்லாம் பொய்.! ரோலக்ஸ் சூர்யா யார் தெரியுமா.?! உளறி கொட்டிய லோகேஷ் கனகராஜ்.!

ஆனால், தற்போது அங்கு, கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்படுகின்றனவாம். இங்கு கேமரா வைக்க கூடாது. இங்கு ஷூட்டிங் செய்ய கூடாது என கட்டுப்பாடுகளை பார்த்த படக்குழு அங்கிருந்து ஷூட்டிங்கை வேறு இடத்திற்கு மாற்றி விட்டதாம். வேறு இடத்தில் தான்  பேங்க் செட் அமைத்து அங்கு படமாக்கினார்களாம்.

தற்போது வரை 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாம். இதற்கு பிறகு,மீதம் 10 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறதாம். இந்த வருட தீபாவளி AK தீபாவளி தான்.

Manikandan
Published by
Manikandan