AK64: இழுபறியில் அஜித் - ஆதிக் படம்!.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!.. பாவம் பேன்ஸ்!...
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறார் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. அஜித் கடந்த பல மாதங்களாகவே கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களை முழுதாக திருப்திபடுத்தியது என்றாலும் தயாரிப்பாளருக்கு 50 கோடிக்கு மேல் வரை நஷ்டம் என்கிறார்கள்.
அதேநேரம் இப்படம் இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கு படம் லாபத்தை கொடுத்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கப் போகிறார் என்பது உறுதியானதும் இந்த படத்தை தயாரிக்க லைக்கா, ஏஜிஎஸ், சன் பிக்சர்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை ஆதிக் ரவிச்சந்திரன் அணுகினார்.
ஆனால் அவர்கள் எல்லோரும் மறுத்துவிட்டார்கள். அதற்கு காரணம் இந்த படத்திற்கு அஜித் கேட்ட சம்பளம் 185 கோடி. மற்ற செலவுகளை எல்லாம் சேர்த்தால் படத்தின் பட்ஜெட் 300 கோடி. எனவே ‘அஜித்துக்கு அவ்வளவு பிஸ்னஸ் இல்லை. அஜித் சம்பளத்தை குறைத்தால் பேசலாம்’ என சொல்லி படத்தை தயாரிக்க யாரும் முன் வரவில்லை.

ஒரு கட்டத்தில் கோலிவுட்டில் சின்ன சின்ன படங்களை தயாரிக்கும் மற்றும் பெரிய படங்களை வாங்கி வினியோகம் செய்யும் விநியோகஸ்தர் ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்க முன் வந்திருப்பதாக செய்திகள் வெளியானது. சம்பளத்திற்கு பதில் இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை தனக்கு கொடுத்து விடுங்கள் என அஜித் சொன்னதாகவும் செய்திகள் வெளியானது. ஒரு கட்டத்தில் அஜித்தின் சம்பளத்தை குறைக்க சொல்லி ராகுல் கேட்க 185 கோடியிலிருந்து இரண்டு கோடி குறைத்து 183 கோடி என முடிவானதாகவும் சொல்லப்பட்டது. .
இந்த மாதம் முதல் வாரத்தில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒருபக்கம் இந்த படத்திற்கு மற்ற நடிகர்களை ஒப்பந்தம் செய்யும் வேலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இறங்கி இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது.எப்படியும் இந்த மாதம் ஷூட்டிங் போய்விடுவார்கள் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இப்படத்தை தயாரிக்கலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் ராகுல் இருப்பதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது.
அதனால்தான் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்கிறார்கள். தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக இருக்கும் அஜித்துக்கே தயாரிப்பாளர் கிடைக்கவில்லையா என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக படத்தின் பட்ஜெட்டை சொல்கிறார்கள். அஜித் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டால் இந்த படம் விரைவில் டேக் ஆப் ஆகும் என்கிறார்கள்.
