Categories: Cinema News latest news

என்னதான் கெத்தா இருந்தாலும் உள்ளுக்குள்ள பயமிருக்கும்ல!.. அஜித் சொன்ன அந்த வார்த்தை…

ஜனவரி 12 ரிலீஸ் என்றிருந்த நிலையில் போனிகபூர் துணிவு பட தேதியை ஒரு நாள் முன்னதாக 11ஆம் தேதி அறிவித்தார். இதனால் வாரிசு படமும் அதே தேதியை ஓகே செய்து இரு படங்களும் ஜனவரி 11 ஆம் தேதியே திரைக்கு வரவிருக்கிறது. அஜித் , விஜய் இவர்களின் டிரெய்லர்கள் பெருமளவில் கொண்டாடப்பட்டன.

ajith1

இதில் சற்று கூடுதலாக விஜயின் வாரிசு பட டிரெய்லரை ரோகிணி தியேட்டரில் எந்த அளவுக்கு கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதை ஊடகங்களில் வாயிலாக நாம் பார்த்திருந்தோம். மேலும் ஒவ்வொரு நாளும் இந்த இருபடங்களின் அப்டேட்ஸ்கள் பற்றி தான் ஊடகங்களில் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் அஜித் இணைவது ஒரு மகாபாரதப்போர் அளவில் பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இப்படி எல்லாம் இல்லை என்றாலும் இணையவசதி, தொழில் நுட்ப வளர்ச்சி இவைகள் தான் இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கின்றன என்று சொல்லலாம்.

ajith vijay

அந்த காலகட்டத்தில் இந்த அளவுக்கு வசதிகள் இல்லை. அதனாலேயே அது பெரிதாக தெரியவில்லை. ஆனால் இப்பொழுது ட்விட், இன்ஸ்டா என ரசிகர்களே பெரிதாக்கி விடுகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க விஜயின் வெறித்தனமான ரசிகர்கள் அஜித்தை சாடுவதும் அஜித்தின் ரசிகர்கள் விஜயை சாடுவதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

இப்படி பல சலசலப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்க படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து வெளி நாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித் இங்கு நடக்கிற விஷயங்களை கேள்விப்பட்டு போனிகபூரையும் எச்.வினோத்தையும் தொலைபேசியில் அழைத்து பேசினாராம். அவர் சொன்ன ஒரு வார்த்தை தான் இப்பொழுது டிரெண்டாகி வருகின்றது.

ajith vijay

அவர்கள் இருவரிடமும் don’t panic என்று சொன்னாராம். இதிலிருந்து என்ன நடந்தாலும் பரவாயில்லை, பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற வகையில் அஜித் சொல்லியிருப்பதாக தெரிகிறது. இந்த செய்தியை வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்தார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini