Connect with us
Ajith-Valimai 1

Cinema News

காரா கப்பலா? அடுத்த புதிய காரை வாங்கிய அஜித்.. என்னம்மா போஸ் கொடுக்காரு பாருங்க

Ajith: பொதுவாக மனிதர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கென ஒரு தனி பேஷன் இருக்கும். பிடித்ததை செய்வது. நினைத்த மாதிரி வாழ்வது என தான் என்னெல்லாம் நினைத்தோமோ அதன்படியே தன் வாழ்க்கையை கொண்டு செல்பவர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் அஜித் ஒரு வித்தியாசமான மனிதராக பார்க்கப்படுகிறார். அவர் இந்த அளவுக்கு சுதந்திரமாக இருக்கிறார் என்றால் அதற்கு முழு காரணம் அவருடைய காதல் மனைவியான ஷாலினி. எந்த ஒரு மனைவியும் தன் கணவர் தன்னுடன் இருக்க வேண்டும் .எங்கு போனாலும் தன்னையும் தன் பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தான் விரும்புவார்கள்.

ஆனால் அஜித் ஷாலினியை பொருத்தவரைக்கும் ஷாலினி முழுக்க முழுக்க குடும்பத்தையும் குழந்தைகளையும் மட்டுமே கவனித்து வருகிறார். அஜித் மட்டுமே வெளிநாடு படப்பிடிப்பிற்கு செல்வது அங்கு இருக்கும் இடங்களை சுற்றிப் பார்ப்பது இதற்கிடையில் தனது பைக் பயணத்தை தொடர்வது என மிகவும் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க:நடிகர்களில் தி பெஸ்ட் அஜித்தான்! யார்கிட்டயும் இல்லாத ஒரு குணம்.. பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்

பைக் பயணம், ரைஃபிள் சுடுதல் ,ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தில் ஈடுபடுதல் இதுபோக அஜித்திற்கு சந்தையில் புதியதாக இறக்குமதியாகும் கார்களை வாங்குவதும் பிடிக்கும் போல .சமீபத்தில் தான் ஒரு புதிய பெராரி காரை வாங்கி இருந்தார் அஜித்.

அந்தக் கார் அருகில் நின்று கொண்டிருப்பது போல அவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. நேற்று கூட அதே காரில் வெளிநாட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் வீடியோவும் வைரலானது. இந்த நிலையில் மறுபடியும் ஒரு புதிய காரை அஜித் வாங்கி இருக்கிறார் .அதை ஷாலினி அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: என்னையே கேட்ட பிரபல இயக்குனர் அந்த நடிகையுடன் படுக்கையில் ஓவர் டோஸில் இறந்தார்… நடிகை ஷாக்

2024 மாடல் காரான போர்ச் 911 காரை தான் அஜித் வாங்கி இருக்கிறார். அந்த புகைப்படத்தை ஷாலினி தன்னுடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டு கூடவே  ‘கடைசியாக அவர் பெற்றுவிட்டார்’ என்றும் ஒரு கேப்ஷனை பதிவிட்டு இருக்கிறார் ஷாலினி.

ajith-car

ajith-car

கிட்டத்தட்ட நாலறைக் கோடி மதிப்பிலான அந்த காரில் அஜித் நின்று கொண்டிருக்கும் மாதிரி போஸ் கொடுத்துள்ளார். பைக் ரேஸ் கார் ரேஸ் இவைகளில் ஆர்வம் உடைய அஜித் இப்போது புதிது புதிதாக காரை வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதையும் படிங்க: மூனு வேளை சாப்பட்டுக்கே கஷ்டப்பட்ட நடிகர் திலகம்!.. ஒரு பிளாஷ் பேக்!…

அவர் எதை நோக்கி பயணிக்கிறார் அவருடைய நோக்கம் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இதற்கு இடையில் துபாயில் ஒரு வீடு வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது ஒரு வேளை சினிமாவிற்கு பிறகு குடும்பத்துடன் துபாயில் செட்டிலாக போகிறாரா என்றும் தெரியவில்லை.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top