வெங்கட் பிரபு இல்லப்பா.. அஜித்த பத்திதான் தெரியுமே.. அடுத்த இயக்குனர் யாருனு பாத்தீங்க

by Rohini |
ajithvenkat
X

ajithvenkat

இப்போது மிகவும் டிரெண்டிங்கான நடிகராக மாறி வருகிறார் அஜித் . நாள்தோறும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். குட் பேட் அக்லி படப்பிடிப்பின் புகைப்படங்கள் என்றும் விடாமுயற்சி படப்பிடிப்பின் புகைப்படங்கள் என்றும் அஜித்தின் ஸ்டைலிஷான புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. விடாமுயற்சி படம் ரிலீஸாகும் நிலையில் இந்த மாதிரியான அஜித்தின் புகைப்படங்கள் வெளியாவது படத்திற்கு ஒரு கூடுதல் ப்ளஸ்தான்.

ஏனெனில் ஒரு பெரிய நடிகரின் படம் ரிலீஸாகிறது என்றால் புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கும். ஆனால் அஜித்தின் படத்தை பொறுத்தவரைக்கும் எந்தவொரு புரோமோஷனும் இல்லை. ஆடியோ வெளியீட்டு விழாவும் இல்லை. அதனால் இந்த மாதிரி புகைப்படங்கள் வெளியாவது ஒரு வகையில் புரோமோஷன் மாதிரியேதான் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ஜனவரி 10 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இன்னும் 4 நாள்கள்தான் இருக்கின்றன. அதுவும் முடிந்து படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்த படியாக அஜித் கார் ரேஸில் கலந்து கொள்ள இருக்கிறார். அடுத்த வருடம் அக்டோபர் மாதத்துடன் கார் ரேஸ் முடிவடைய இருக்கிறது.

அதனால் அஜித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் தான் தெரியும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் வெங்கட் பிரபு என ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. ஆனால் இப்போது வந்த தகவலின் படி ஆதிக்கின் சின்சியாரிட்டியை பார்த்து அடுத்த படத்தின் இயக்குனர் நீதான் என அஜித் ஆதிக்கிடம் சொன்னதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கின்றது.


அஜித்தை பொறுத்தவரைக்கும் சமீபகாலமாக ஒரு இயக்குனருடன் தொடர்ந்து 3 அல்லது நான்கு படங்களில் கால்ஷீட் கொடுத்துவிடுகிறார். அந்த வகையில் ஆதிக்கும் இணைந்துவிட்டார் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள். இதற்கு மத்தியில் மார்க் ஆண்டனி 2 எடுக்கும் நேரத்தில்தான் அஜித்திடம் இருந்து ஆதிக்கிற்கு அழைப்பு வந்திருக்கிறது. இதை விஷாலிடம் ஆதிக் சொல்ல ‘அஜித் கால்ஷீட் கொடுக்கிறதெல்லாம் பெருசு. உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. அதனால் அந்த படத்த முடிச்சுட்டு வா’ என சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

இதை ஆதிக் ஒரு சமயம் அஜித்திடம் சொல்லியிருக்கிறார். அதனால் பதிலுக்கு அஜித்தும் குட் பேட் அக்லிக்கு பிறகு மார்க் ஆண்டனி 2 படத்தை முடிச்சுட்டு வா. அதன் பிறகு நாம சேர்ந்து படம் பண்ணலாம் என சொன்னதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

Next Story