Categories: Cinema News latest news throwback stories

22 வருட பகையை தீர்த்து கொள்வாரா அஜித்.?! விக்னேஷ் செய்த வேலையால் கடுப்பான ரசிகர்கள்.!

அஜித் வளர்ந்து தற்போதைய இளம் முன்னணி நாயகர்கள் போல இருந்த காலம் அது. அப்போது தான் 2000 ஆம் ஆண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் எனும் திரைப்படம் வருகிறது. அப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கினார். அதில், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு ஆகியோர் நடித்து இருந்தனர்.

அதில் ஐஸ்வர்யா ராய் டாப்பில் இருந்த நேரம் அது. உலக அழகி எனும் பட்டதோடு கொடிகட்டிபறந்த நேரம். முதலில் கதை படி அக்கா தபு மம்முட்டி ஜோடியாகவும். தங்கை ஐஸ்வர்யா தான் அஜித்திற்கு ஜோடியாகவும் இருந்ததாக கூறப்பட்டது.

இதையும் படியுங்களேன்  – உங்கள தொட்டால் நான் வருவேன்… கம்பீரமாய் துணை நின்ற விஜயகாந்த்.. நெகிழ்ந்து போன சினிமா பிரபலம்.!

ஆனால், இளம் நடிகரான அஜித்துடன் ஜோடி சேர ஐஸ்வர்யா ராய் மறுத்ததாக அப்போதே செய்திகள் கசிந்தன. அதன் காரணமாக தான் கதையில் மாற்றம் செய்யப்பட்டு அக்கா தபு அஜித்திற்கு ஜோடியாக மாற்றப்பட்டார் என கூறப்பட்டது. அஜித்தை வேண்டாம் என ஐஸ்வர்யா ராய் சொல்லிட்டாரே என  அது அஜித் ரசிகர்களை கோபபடுத்தியது.

இதையும் படியுங்களேன்  – உங்கள தொட்டால் நான் வருவேன்… கம்பீரமாய் துணை நின்ற விஜயகாந்த்.. நெகிழ்ந்து போன சினிமா பிரபலம்.!

இந்த நிகழ்வு நடந்த 22 வருடம் ஆகிவிட்டது. தற்போது ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள, அவரது 62வது படத்தில் ஹீரோயினாக நடிக்க ஐஸ்வர்யா ராய் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த விஷயம் அஜித் ரசிகர்களை சற்று சூடாக்கியுளளது. அப்போது அஜித்தை வேண்டாம் என சொன்ன நடிகையா என கூறிவருகின்றனர்.

இதற்கு அஜித் ஓகே சொல்வாரா.? அல்லது 22வருடத்திற்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் செய்ததாக கூறப்படும், அதே ‘நோ’-வை அஜித் சொல்கிறாரா என்பதை அடுத்தடுத்த அப்டேட் வந்தால் பார்த்துவிடலாம்.

Manikandan
Published by
Manikandan