Categories: Cinema News latest news

அஜித்தும் அரவிந்த்சாமியும் இந்த விஷயத்தில் ஸ்டிரிக்டா இருக்காங்க! ஃபாலோ பண்ணுங்கப்பா

Ajith Aravindswamy: இன்று அஜித்தை எந்த அளவுக்கு பெண் ரசிகைகள் ரசித்து வருகிறார்களோ அதற்கு மேலாக 90கள் காலகட்டத்தில் நடிகர் அரவிந்த் சாமியையும் பெருமளவு விரும்பி வந்தார்கள். பெண்கள் அஜித் வருவதற்கு முன்பு வரை அரவிந்தசாமி போல மாப்பிள்ளை வேண்டும் என்று தான் கூறி வந்தார்கள். அஜித் வருகைக்குப்பின் அது மாறியது. முன்பெல்லாம் பெரிய அரவிந்தசாமி நினைப்பு என்றுதான் கூறி காமெடி செய்து வந்தார்கள்.

ஆனால் இப்பொழுது பெரிய அஜித்துனு நினைப்பு என்று சொல்லி காமெடி செய்து வருகிறார்கள். இப்படி அஜித்திற்கும் அரவிந்தசாமிக்கும் இடையே ஒரு சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவருமே ஆண் அழகன்களாக இருந்தார்கள். ஒரு ஸ்டைலிஷ் ஆன ஹீரோவாக சார்மிங்கான ஹீரோவாக லவ்வர் பாயாகவே வலம் வந்தனர்.

இதையும் படிங்க: ஹிட்டடித்தா சும்மா இருக்க மாட்டாங்களே… கேஜிஎஃப் கதையை கையில் எடுக்கும் தமிழ் சினிமா!..

ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு இப்போது அரவிந்தசாமி படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் மெய்யழகன் திரைப்படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அரவிந்த்சாமி.

இந்த நிலையில் ரசிகர் மன்றம் குறித்து அரவிந்த்சாமி அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். இது அப்படியே அஜித்தின் கொள்கையாகவே பார்க்கப்படுகிறது. ரசிகர் மன்றம் வைத்தால் யாருக்கு லாபம் இருக்கிறது? அவர்களுக்கும் இல்லை .நமக்கும் இல்லை. இன்று நான் நடிப்பேன் நாளை நான் நடிக்காமல் கூட போகலாம்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு அப்பாவாக நடிக்கும் டாப் ஹீரோ! என்னடா இவருக்கு வந்த சோதனை?

அப்படி இருக்கும் பட்சத்தில் ரசிகர்களின் நிலைமை என்னவாகும். ஒரு உதாரணத்திற்கு என்னுடைய மகன் நான் ரசிகர் மன்றத்தில் சேரப் போகிறேன் என்று சொன்னால் என்ன சொல்வேன். நான்  ‘வேண்டாம் ஒரு படத்தை பாரு. என்ஜாய் பண்ணு. உன்னுடைய கருத்தை சொல்லு. அப்படியே மறந்திடு’ இப்படித்தான் நான் சொல்வேன். அதேபோல தான் ரசிகர்களுக்கும்.

ஊரான் பிள்ளைக்கு வேற. தான் பிள்ளைக்கு வேற அப்படின்னு நினைக்கக் கூடியவன் நான் கிடையாது. அதனால் ரசிகர் மன்றம் என்பது அவசியமற்றது என அரவிந்த்சாமி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் இப்படியே அஜித் மாதிரியே சொல்கிறாரே என கமெண்டில் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: கோட் படத்தால் திடீர் முடிவெடுத்த தக் லைஃப் டீம்… இது நல்ல இருக்கே!…

அஜித்தும் இப்படித்தான் தனக்காக இருந்த மாபெரும் ஒரு ரசிகர் கூட்டத்தை ரசிகர் மன்றத்தை கலைத்தவர். இப்படி எந்த நடிகரும் செய்ததில்லை. ரசிகர்கள் நன்றாக இருக்க வேண்டும் .அவர்கள் குடும்பத்தை அவர்கள் கவனிக்க வேண்டும் என்பதுதான் அஜித்தின் எண்ணமாக இருந்து வருகிறது .அதைப் போலத்தான் இப்போது அரவிந்த்சாமியும் கூறியிருக்கிறார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini