26 வருஷம் ஆகியும் புது ஜோடி போல் அஜித் - ஷாலினி - வைரலாகும் COUPLE க்ளிக்ஸ்!
அஜித் - ஷாலினி:
தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடியான இருந்து வரும் அஜித் - ஷாலினி இருவரும் 2000 ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் இணைந்து அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு பின்னர் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் .

ஷாலினி அலைபாயுதே, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம், பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அவை அனைத்து மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது.
லேட்டஸ்ட் போட்டோ:

இவர் ஹீரோயின் ஆக நடிப்பதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அஜித் தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோ என்று அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதனிடையே தனது லட்சியத்தை தேடி கார் ரேசிங் உள்ளிட்டவற்றில் பங்கேற்று அதில் வெற்றியும் பெற்று வருகிறார் .
இப்படியான சமயத்தில் அஜித் ஷாலினி இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இரவு டின்னர் சென்றபோது எடுக்கப்பட்ட இந்த போட்டோவை ஷாலினி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
