அழகான காதலின் அடையாளம் அஜித் - ஷாலினி - வைரலாகும் COUPLE கிளிக்ஸ்!
அஜித் - ஷாலினி:
தமிழ் சினிமாவில் பிரபலமான ஜோடியாக பார்க்கப்பட்டு வருபவர் தான் அஜித் மற்றும் ஷாலினி. இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டு பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு மன வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்கள்.

அஜித் ஷாலினி இருவரும் தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடியாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட திருமணம் 26 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் அவர்களுக்கு இடையில் இருக்கும் இந்த காதல் கொஞ்சம் கூட குறையவில்லை.

லேட்டஸ்ட் புகைப்படம்:
ஆம் தற்போது நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் எடுத்துக் கொண்ட COUPLE புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அஜித் மனைவி ஷாலினியை தூக்கி கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது .

இத்தனை வருடமாகியும் இவர்களுக்குள் இருக்கும் காதல் கொஞ்சம் கூட குறையலையே என ரசிகர்கள் பார்த்து வர்ணித்து வருகிறார்கள். எவ்வளவு புகழின் உச்சத்திற்கு அஜித் சென்றாலும் அவரின் குணாதிசயத்திலிருந்து கொஞ்சம் கூட மாறவில்லை. அதேபோல் அஜித் மீது ஷாலினி வைத்திருக்கும் அன்பு எவ்வளவு வயதாகி போதிலும் குறைந்ததில்லை என எடுத்துக்காட்டும் விதமாக இந்த புகைப்படங்கள் இருக்கிறது. இந்த ஜோடி இப்படியே மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள்.
