ajith vijay meena
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் முக்கிய படங்களில் நாயகியாக இருந்த மீனா ஏன் விஜயுடன் மட்டும் நடிக்கவில்லை என்ற சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தல அஜித்தின் ஹிட் படங்களான ஆனந்த பூங்காற்றே, சிட்டிசன், வில்லன் படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மீனா. இவர்களின் ஜோடிக்கே ரசிகர்கள் கூட்டம் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அஜித்துடன் மூன்று படங்களில் நடித்தாலும் விஜயுடன் ஒரு பாடலுக்கு மட்டுமே மீனா நடனம் ஆடி இருக்கிறார்.
Ajith_Meena
இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசிய மீனா, அஜித் எப்போதுமே முதல் இடத்துக்கு வர வேண்டும் என தான் நினைப்பார். ஒரே வரிசையில் உட்கார்ந்து இருந்தாலும் கூட தனக்கு முதல் சீட் கிடைப்பதையே பெருமையாக நினைப்பார் அஜித். அவருடன் நான் நடித்ததில் சிட்டிசன் தான் ரொம்ப பிடித்த படம். அதற்காக பெரிய மெனக்கெட்டோம். ப்ளாக் மேக்கப்பை போட்டு அந்த வெயிலி அஜித் அலட்டிக்கொள்ளாமல் நடித்து விடுவார் என்றார்.
Vijay_Meena
விஜய் குறித்து கூறும்போது, நானும் விஜயும் ரொம்பவே அமைதியான குணம் கொண்டவர்கள். சரக்கு வச்சிருக்கேன் பாடலில் கூட நாங்க போட்டி போட்டுக்கொண்டு நடித்தோம். அவருடன் நான் நடிக்க வேண்டிய 4 படங்கள் மிஸ்ஸாகி விட்டது. எனது கால்ஷீட் குளறுபடியால் நடந்த சொதப்பல் தான் அது. பிரியமுடன் மற்றும் பிரண்ட்ஸ் படங்கள் இதில் முக்கியமானது.
இதையும் படிங்க: கிட்டத்தட்ட ஒன்றரை மாசமா அந்த பழக்கத்தில் இருந்த சசிகுமார்!.. அந்த படத்தின் கதை அப்படி!..பாவம் தான்!..
சமீபத்தில் நைனிகாவுடன் படப்பிடிப்பு சென்ற போது, எனக்கு கால்ஷீட் கொடுக்காம பிஸியா நடிச்சுட்டு இப்போ ரெஸ்ட் எடுக்கிறீங்களா? என்னை உங்களுக்கு பிடிக்காது தானே. அஜித்தை தானே பிடிக்கும் என்றார். அஜித்தும் விஜயும் எனக்கு நெருங்கிய நண்பர்கள் தான் எனக் கூறி இருக்கிறார்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…