×

விவேக் பற்றி ரியாக்‌ஷன் காட்டாத விஜய், அஜித் - இவ்ளோதான் உங்க நட்பா சார்?...

 
விவேக் பற்றி ரியாக்‌ஷன் காட்டாத விஜய், அஜித் - இவ்ளோதான் உங்க நட்பா சார்?...

சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால்  சமீபத்தில் மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர். சமூகவலைத்தளங்கள் மூலமாகவோ, அறிக்கை மூலமாகவே நடிகர்,நடிகைகள் தங்கள் சோகத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

ஆனால், விவேக்குடன் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் விவேக் மரணம் பற்றி எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை. விஜய் தனது புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியாவில் இருந்தார். அவருக்கு தகவல் தாமதமாக கூட கிடைத்திருக்கலாம். குறைந்தபட்சம் தனது டிவிட்டரில் ஒரு டிவிட் செய்திருக்கலாம். ஆனால், விஜய் அதை செய்யவில்லை.

vivek

இத்தனைக்கும், விஜய் நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படங்களில் விவேக்கின் பங்கு நிச்சயம் இருக்கும். தமிழன், பத்ரி, பிரியமானவளே, குஷி, ஆதி, யூத், ஷாஜகான் என பெரிய பட்டியலே இருக்கிறது. அதிலும், தொடர் தோல்வியை கொடுத்து வந்த விஜய்க்கு வெற்றிப்படமாக அமைந்த திருமலை படத்தில் கூட விவேக்கின் காமெடி தேவைப்பட்டது. பிகில் படத்திலும் விவேக் நடித்திருந்தார். 

படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருந்த நடிகர் தனுஷ் கூட விவேக்கின் மரணத்திற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் ரியாக்ட் செய்திருந்தார். ஆனால், தான் நடிக்கும் திரைப்படங்களின் தலைப்பு,டீசர், டிரெய்லர் உள்ளிட்ட செய்திகளை டிவிட்டரில் பதிவிடும் விஜய், விவேக்கின் மரணத்திற்கு ஒரு டிவிட் கூட செய்யாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. '

அதேபோல், உன்னைத்தேடி, முகவரி,கிரீடம், காதல் மன்னன், பூவெல்லாம் உன் வாசம், என்னை அறிந்தால், விஸ்வாசம் என அஜித்துடன் பல படங்களில் விவேக் நடித்துள்ளார். தொடர் தோல்வியை கொடுத்து வந்த அஜித்துக்கு வெற்றிப்படமாக அமைந்த ‘வாலி’ படத்திலும் விவேக்கின் காமெடி தேவைப்பட்டது. ஆனால், சென்னையில் இருந்த போதும் விவேக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்த கூட அஜித் செல்லவில்லை.

vivek

அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என அப்போதைய பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதும் பதறியடித்துக்கொண்டு பி.ஆர்.ஓ .மூலம் மறுப்பு அறிக்கை வெளியிட்டார் அஜித். அதேபோல், தான் நடித்து வரும் வலிமை பட அப்டேட் கிடைக்காத அதிருப்தியில் தனது ரசிகர்கள் அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் ஆகியோரிடம் அப்டேட் கேட்டபோது, கோபப்பட்டு அறிக்கை வெளியிட்டார். அதுபோலவே விவேக்கின் மரணத்திற்கும் குறைந்த பட்சம் பி.ஆர்.ஓ மூலம் ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கலாம். ஆனால், அதைக்கூட அவர் செய்யவில்லை...

vivek

இதில் ஆறுதல் என்னவெனில், விவேக்கின் மரணத்திற்கு விஜய், அஜித் ரியாக்ட் செய்யவில்லை என்றாலும் அவரின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர். அதில் பலரும் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களை வெளியிட்டனர். ரசிகர்கள் எவ்வளவோ மேல்!...

இதற்கெல்லாம் கோவப்படுவதை விட வருத்தமே மிஞ்சுகிறது. திரையுலகில் நடிகர்கள் இப்படியும் இருப்பார்களா? என்கிற கேள்வியை விவேக்கின் மரணம் நமக்கு உணர்த்திவிட்டு போயிருக்கிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News