Categories: Cinema News latest news throwback stories

விஜய் அளவுக்கு வியாபாரமே இல்ல., ஆனாலும் அஜித் சம்பளம் 100 கோடி!? விளாசும் சினிமா பிரபலம்.!

தமிழ் சினிமாவில் எப்போதும் இரு துருவ  விளையாட்டு இருந்து கொண்டே இருக்கும். ரசிகர்களே அதனை மறந்து கிடந்தாலும், இந்த நடிகர் முதல் நாள் வசூல் இவ்வளவு, இந்த நடிகர் இந்த ஏரியாவில் அதிக கலெக்சன் என புள்ளிவிவரம் எடுத்து காட்டி மீண்டும் போட்டியை ஞாபகப்படுத்தி விடுவர்.

அப்படிதான் தற்போதைய உச்ச நட்சத்திர போட்டியாக பார்க்கப்படுவது விஜய் – அஜித் தான். இவர்களே இணைந்து படம் நடித்தாலும் இதில் யாருக்கு எத்தனை சீன் என எண்ணி கூறிவிடுவார்கள் போல அந்தளவுக்கு தான் இருவரது வியாபாரமும் இருக்கிறது என்பதே உண்மை.

அப்படி தான் இருவரது சம்பளமும் கணக்கிடப்பட்டு வருகிறதாம். விஜயின் கடைசி படங்கள் ஒவ்வொன்றும் புதிய வசூல்களை பெற்று வருகிறதாம். சரியாக போகாத பீஸ்ட் படம் கூட இங்கு நல்ல வசூலை பெற்று தான் வருகிறது என்கிறது சில புள்ளி விவரங்கள்.

இதையும் படியுங்களேன் – நன்றி கடன் தீர்த்த தனுஷ்.! செஞ்ச காரியம் தெரிஞ்சா வாயடிச்சி போயிருவீங்க.!

ஆனால் அந்தப்பக்கம் அஜித்திற்கு அப்படி இல்லையாம் . விஸ்வாசம் நல்ல லாபம் தந்த வெற்றி தான். ஆனால், நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையாம். இருந்தாலும், அஜித் சம்பளம் ஏற்றிக்கொண்டு தான் வருகிறாராம். அஜித் லைகா நிறுவனத்திற்காக நடிக்கும் அவரது 62வது திரைப்படத்திற்காக 100 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இது பற்றி  சினிமா பத்திரிகையாளர் ‘வலைப்பேச்சு’ பிஸ்மி அண்மையில் கூறுகையில், ‘  விஜய் பட வியாபாரம் அளவுக்கு அஜித்திற்கு இன்னும் வியாபாரம் பெரிதாக்கவில்லை. இருந்தாலும், விஜய் சம்பளம் ஏறும் போது அஜித் சம்பளமும் ஏறிக்கொண்டே தான் போகிறது. ‘ என கருத்து தெரிவித்து இருந்தார்.இந்த கருத்து அஜித் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

Manikandan
Published by
Manikandan